கடைக்காரரை மிரட்டி பணத்தை திருடிய இருவர் கைது
தஞ்சையில் பூக்கடைக்காரரை மிரட்டி, கல்லாவில் இருந்து பணத்தை எடுத்துச்சென்ற வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்(42). இவர் அதே பகுதியில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 31 ஆம் தேதி இவரது கடைக்கு வந்த 2 பேர், கல்லாவில் இருந்த ரூ.500 பணத்தை எடுத்தனர். இதை சங்கர் தட்டிக் கேட்ட போது அவரை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து, தஞ்சை கிழக்கு காவல்நிலையத்தில் சங்கர் புகார் செய்தார். இதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் சங்கர் கடையில் இருந்து பணத்தை எடுத்துச் சென்றவர்கள், தஞ்சை கீழ வண்டிக்காரத் தெருவை அப்பாஸ் கார்த்தி (27) மற்றும் தஞ்சை வெட்டுக்கார தெருவை சேர்ந்த வெங்கடேசன் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து, வெங்கடேசனை காவல்துறையினர் கைது செய்தனர். அப்பாஸ் கார்த்தி வேறொரு வழக்கில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் வெண்ணைத்தாழி திருவிழாவில், கூடிய பத்தாயிரக்கணக்கான மக்களுக்கு, சுட்டெரிக்கும் கடும் வெயிலில் மன்னார்குடி சாகர் ஜவுளி நிறுவனத்தார் உணவு பொட்டலங்களையும், குளிர் பானங்களையும் வழங்கினர்.