ழக மாணவர்களின் கல்வி பெறும் உரிமை யை அபகரிக்க ஒன்றிய பாஜக தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க, ஒன்றிய அரசின் கல்விக்கொள்கையால், எந்த மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகப் போகிறார்களோ, அவர்களை வைத்தே - அதுவும் குழந்தைகளை வைத்தே, ஒரு மட்ட ரகமான அரசியலை தமிழக பாஜக-வினர் செய்துள்ளனர். “மும்மொழி கல்வி கற்க எங்களுக்கு உரிமை இல்லையா முதல்வரே?” என்று அரசுப் பள்ளி மாணவிகள் கேட்பது போல ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் வெளியான நிலையில், அதனை திட்டமிட்டு வீடியோவாக உருவாக்கி வெளியிட்டது, ஒரு பாஜக பிர முகர் என்பது அம்பலமாகி இருக்கிறது. இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்டது தெளிச்சாத்த நல்லூர். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் பேசி யிருக்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்க ளில் பரவியது. அதில், “மும்மொழி கல்வி கற்க எங்களுக்கு உரிமை இல்லையா முதல்வரே?” என்று தமிழக முதல்வரை, மாணவிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில், இந்த மாணவிகள், தாங்களாக பேசவில்லை; பாஜக பேர்வழி ஒரு வரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்பதை, மும்மொழிக்கொள்கை குறித்து பேசிய மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தையின் தந்தையான மாரிச்செல்வம் அம்பலப்படுத்தி இருக்கிறார். “பாஜக-வைச் சேர்ந்த விபினீஸ்வரன் என்ப வர் வெள்ளிக்கிழமை (பிப்.21) அன்று குழந்தை களிடம் மும்மொழிக் கொள்கைக்கு ஆதர வாகப் பேசுங்கள் எனக் கூறியுள்ளார். விவரம் தெரியாத குழந்தைகளும், ‘மும்மொழிக் கொள் கைக்கு அனுமதி தாருங்கள்’ என முதல்வ ருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது பாஜக-வின் சதி வேலையாகும். நேரடியாக அரசியல் செய்ய முடியாத பாஜக, குழந்தை களை வைத்து அரசியல் செய்கிறது. மும்மொழிக்கொள்கை குறித்து எனது குழந்தை பேசியதில் குழந்தைக்கோ, எனக்கோ, பள்ளி ஆசிரியர்களுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை, பள்ளிக்கு வரும் குழந்தை களை இப்படிப் பேசுமாறு வைத்தது அநாகரீ கமானது” என்று காட்டமாக குறிப்பிட்டு கண் டித்துள்ளார். (ந.நி)