tamilnadu

img

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

கரூரில் உயிரிழந்த, குழந்தைகள் அப்பாவி பொதுமக்களுக்கு இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக   கடலூரில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையம் அருகில் நடந்த இந்த நிகழ்வில்  மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சம்சீர் அகமது, மாவட்டத் தலைவர்  பூபதி,  செயலாளர் சௌமியா, வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர்  கலைவாணன், ஆகாஷ், இசக்கிமுத்து, மாணவர் சங்க நிர்வாகிகள்  ஆனந்தராஜ், சிவநந்தனி, சபரி, செங்கதிர், சிவன் ராஜ், முன்னாள் மாவட்டச் செயலாளர் அமர்நாத்   உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.