தியாகி பி.சீனிவாசராவ் படத்திற்கு மரியாதை
சுதந்திர போராட்ட தியாகி.பி.சீனிவாசராவ் அவர்களின் 118-ஆவது பிறந்த நாளையொட்டி திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் அவரது உருவப்படத்திற்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர்மன்றத் தலைவர் கவிதா பாண்டியன், நகர்மன்ற துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், நகராட்சி ஆணையர் துர்கா, வட்டாட்சியர் பரமேஸ்வரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து
மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் உட்பட 41 மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்.
பணி நிறைவு பாராட்டு விழா
தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து சமரசமின்றி தொடர்ந்து போராடும், உழைப்பாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவரும், டிஆர்இயு செயல் தலைவருமான தோழர் அ.ஜானகிராமன் பணி நிறைவு பாராட்டு விழா டிஆர்இயு ஓப்பன் லைன் சார்பில் வியாழனன்று திருச்சியில் நடந்தது. விழாவிற்கு டிஆர்இயு திருச்சி கோட்ட தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். உதவி கோட்டத் தலைவர் வேந்தன் வரவேற்புரை ஆற்றினார். கோட்டச் செயலாளர் கரிகாலன், உதவி பொது செயலாளர்கள் சரவணன், ராஜா, முன்னாள் கோட்ட செயலாளர் கண்ணன், சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திருச்சி கோட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோட்ட உதவி தலைவர் பலராம் நன்றி கூறினார்.