tamilnadu

திருநெல்வேலி முக்கிய செய்திகள்

முனைவர் பட்டப்பதிவு 


சுந்தரனார் பல்கலை.யில் ஜூன் 22  பிற்சேர்க்கை நுழைவுத் தேர்வு


திருநெல்வேலி, ஏப்.17 -நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளில் இளம் முனைவர் மற்றும் முனைவர் பட்டப் பதிவுக்கான பிற்சேர்க்கை தகுதி நுழைவுத்தேர்வு வரும் ஜூன் மாதம் 22-ம் தேதி நடைபெறுகிறது.  இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ்பாபு வெளியிட்ட செய்திக்குறிப்பில், நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளில் இளம் முனைவர் மற்றும் முனைவர் பட்டப் பதிவுக்கான பிற்சேர்க்கை தகுதி நுழைவுத் தேர்வு வரும் ஜூன் 22-ம் தேதி முற்பகல் 11 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது. பிற்சேர்க்கை நுழைவுத் தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஏப்.22-ம் தேதி முதல் ஜூன் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது தொடர்பானமேலும் விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் www.msuniv.ac.in தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு


திருநெல்வேலி, ஏப்.17 -நெல்லை மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.தமிழகத்தில் வியாழக்கிழமை நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. நெல்லை தொகுதியில் அதிமுக, திமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்,நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் உள்பட 26 பேர் போட்டியிடுகின்றனர். அதேபோல் தென்காசி தொகுதியில் 25 பேர் போட்டியிடுகின்றனர். நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 2,979 வாக்குச்சாவடிகள் உள்ளன.இந்த வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிவதற்கான எந்திரம் உள்ளிட்ட தேர்தல் உபகரணங்களை கொண்டு செல்ல 267 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒரு மண்டல அலுவலருக்கு ஒரு வாகனங்கள் வீதம் 267 வாகனங்கள் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.பின்னர் அனைத்து சோதனைகளுக்கு பிறகு மண்டல அலுவலர்கள் மற்றும் காவல்துறை பாதுகாப்புடன் ஓட்டு பதிவு எந்திரங்கள் வாக்கு சாவடிக்கு கொண்டு செல்லப்பட்டன.