tamilnadu

img

‘மதுரை மண்ணில் மதவெறிக்கு இடமில்லை!’ உரத்து முழங்கிய சிபிஎம் உண்ணாநிலை அறப்போர்!

‘மதுரை மண்ணில் மதவெறிக்கு இடமில்லை!’ உரத்து முழங்கிய சிபிஎம் உண்ணாநிலை அறப்போர்!

மதுரை, டிச. 30 - மதுரை மண்ணில் மதவெறி அரசியலுக்கு இடமில்லை என்றும், வளர்ச்சி திட்டங்களை முன்னெடுத்து மக்கள் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், மதுரையில் மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டம் நடை பெற்றது. மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா  – நடராஜர் திரையரங்கம் அருகில், செவ்வாய்க்கிழமை (டிச. 30) அன்று காலை 9 மணிக்குத் துவங்கிய இந்த  உண்ணாநிலை அறப்போராட்டத்திற்கு மதுரை மாநகர் மாவட்டக் குழுச் செய லாளர் மா. கணேசன் மற்றும் மதுரை புறநகர் மாவட்டக் குழுச் செயலாளர் கே. ராஜேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராம லிங்கம், கே. சாமுவேல் ராஜ், என்.பாண்டி, கே. அர்ச்சுணன், செ. முத்துக் கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் கள் இரா. விஜயராஜன், ஆர். சச்சி தானந்தம் எம்.பி., எஸ்.கே. பொன்னுத் தாய்,  எஸ். பாலா, த. செல்லக்கண்ணு,  மாவட்டக்குழு உறுப்பினரும் மாநக ராட்சி (பொ)மேயருமான டி. நாக ராஜன் மற்றும் கட்சியின் மாவட்டச் செய லாளர்கள் அ. குருசாமி (விருதுநகர்), எம். ராமச்சந்திரன் (தேனி), ஏ.ஆர். மோகன் (சிவகங்கை), கே. பிரபாகரன் (திண்டுக்கல்), மூத்த தலைவர்கள் எஸ்.பாலசுப்பிரமணியன், வி. காசிநாத துரை உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். திமுக மாவட்டச் செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ, முன்னாள் மேயர் பெ. குழந்தைவேலு, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் எம்.சி., சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் எம்.எஸ். முருகன், சிபிஐ(எம்எல்) மாவட்டச் செயலாளர் மதிவாணன், மதிமுக மாநிலப் பொதுக்குழு உறுப்பி னர் மு. பூமிநாதன் எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் முனியசாமி, வழக்கறிஞர் வாஞ்சிநாதன், விசிக மாவட்டச் செயலாளர்கள் ப. ரவிக்குமார், அரச. முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் போராட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாநிலை அறப்போராட்டத்தை நிறைவு செய்து சிறப்புரையாற்றினார்.  முன்னதாக, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சதித் திட்டங்களையும், தென் தமிழக பகுதிகளில் வளர்ச்சித்  திட்டங்களை திட்டமிட்டு புறக் கணிக்கும் ஒன்றிய அரசின் வஞ்சகத்தை யும் மதுரை மக்கள் முறியடிப்பார்கள்; சங்-பரிவாரங்களின் கலவர முயற்சி ஒருநாளும் மதுரை மண்ணில் ஈடே றாது என்று முழக்கங்கள் எழுப்பப் பட்டன.  நிறைவில், மேற்கு ஒன்றாம் பகுதிக் குழு செயலாளர் பி. வீரமணி நன்றி கூறினார்.