தீக்கதிர் வாசகர் வட்ட “ அறிவோம் மார்க்சியம்” பயிற்சி பட்டறை
பெரம்பலூர், மார்ச் 16- பெரம்பலூர் மாவட்ட தீக்கதிர் வாசகர் வட்டத்தின் நான்காம் ஆண்டு தொடர் “ அறிவோம் மார்க்சியம்” வகுப்பு 22.02.2025 முதல் 22.03.2025 வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை கூட்டரங்கில் இந்த வார அரசியல் வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது. சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளர் ஏ.கே. ராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார். நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் எழுத்தாளர் இரா. எட்வின் கலந்து கொண்டு “இடது விழி வழி வைக்கம் 100” என்ற தலைப்பில், வைக்கம் போராட்டம், காந்தி மற்றும் பெரியாரின் அரசியல் நிலைப்பாடுகள், ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கையின் அழுத்தம் ஆகியவை சிறப்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் ஒன்றியச் செயலாளர் பி. பெரியசாமி நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டாக்டர் கருணாகரன், சமூக செயற்பாட்டாளர் டாக்டர் ஜெயலட்சுமி கருணாகரன், மாவட்ட செயற் குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், தி.க நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.