tamilnadu

பொதுநல வழக்கை நிராகரித்த உச்சநீதிமன்றம்

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் (பிரயாக்ராஜ்) உள்ள திரி வேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா நிகழ்வில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கும்பமேளா போன்ற திருவிழாக்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்க நடவ டிக்கை எடுக்கக் கோரியும், கும்பமேளா வில் நிகழ்ந்த விபத்திற்கு காரணமான அதி காரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் மூத்த வழக்கறிஞர் விஷால் திவாரி உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொ டர்ந்தார்.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வு முன்பு திங்களன்று விசாரணைக்கு வந்தது. உத்தரப்பிரதேச மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி,“கூட்ட நெரிசல் தொடர்பாக நீதி விசாரணை நடந்து வருகிறது. இது போல ஒரு மனு உயர்நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இருதரப்பு வாதத்திற்குப் பின்பு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, “கும்பமேளா கூட்ட நெரிசல் ஒரு துரதிர்ஷ்டமான, கவலைக்குரிய சம்ப வம் தான். ஆனால் மனுதாரர் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாட லாம். ஏற்கெனவே இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்ய நீதி விசார ணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள் ளது” என அவர் உத்தரவிட்டார்.