tamilnadu

img

ஸ்மார்ட்சிட்டி திட்டப் பணிகளை விரைவுபடுத்தி முடிக்க வேண்டும்... மதுரையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

மதுரை:
மதுரை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா ஊரடங்கு காலத்தில் கடன்தொகை வசூல் செய்திடும் நுண் நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்; மதுரையில் உள்ள கண்மாய்கள் மற்றும் வரத்து கால்வாய் களை தூர்வாரி மழை நீரைத் தேக்கநடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா நோய் தொற்று காலம் என்பதால் அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிற நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது தவிர்க்கப்படுகின்றது உடனடியாக பிற நோய்களுக்கான சிகிச்சை அளிப்பதை உறுதிப்படுத்த வேண்டும், நான்கு மாசி வீதிகளில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் நிறைவேற்ற கோரி சிபிஎம் சார்பில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய பகுதி குழு சார்பில் பேச்சியம்மன் படித்துறை ஆறு முச்சந்தி அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பூந்தோட்டம் கிளைச் செயலாளர் நாகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் இரா. விஜயராஜன், பகுதிகுழு செயலாளர் பி. ஜீவா, மாவட்டக்குழு உறுப்பினர் பி. கோபிநாத் ஆகியோர் பேசினர். அரசரடி பகுதிகுழு சார்பில் பகுதிகுழு செயலாளர் கு.கணேசன் தலைமையில் பெத்தானியாபுரத்தில் கண்ணில் கருப்பு துணிகட்டிநூதன முறையிலும், பகுதிகுழு உறுப்பினர் பி. வீரமணி தலைமையில் சம்மட்டிபுரத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வை. ஸ்டாலின் மற்றும் பகுதி குழு உறுப்பினர்கள் ,கிளை செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பழங்காநத்தம் பகுதி குழு சார்பில்பழங்காநத்தம் ஜெகதா தியேட்டர் அருகில் பகுதிகுழுச் செயலாளர் கா. இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ். பாலா, மாவட்ட குழுஉறுப்பினர் டி. செல்வராஜ் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர். முனிச்சாலை பகுதிகுழு சார்பில் தினமணி தியேட்டர் அருகில் பகுதிகுழு உறுப்பினர் பாலசந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை மாவட்டக் குழு எஸ். சந்தியாகு துவங்கி வைத் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மா.கணேசன் ,ஜெ. லெனின் பேசினர். ஜெய்ஹிந்துபுரம் பகுதிகுழு சார்பில் சோலைஅழகுபுரம் மெயின் ரோட்டில் பகுதிகுழு உறுப்பினர் தனுஷ்தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். பாலசுப்பிரமணியம் மற்றும்பகுதிகுழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 

தெற்குவாசல் பகுதிகுழு சார்பில்தெற்குவாசல் மார்க்கெட் பகுதியில் பகுதிகுழு செயலாளர் யு.எஸ். அபுதாகிர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழுஉறுப்பினர் இரா.லெனின் மற்றும் பகுதி குழு உறுப்பினர்கள் உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர். புதூர் - அண்ணாநகர் பகுதிகுழு சார்பில் புதூர்பேருந்து நிலையம் அருகில் பகுதிகுழு செயலாளர் டி. குமரவேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ. ரமேஷ், வழக்கறிஞர் இடைக்கமிட்டி செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் பகுதிகுழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். செல்லூர் பகுதிக் குழு சார்பில் தாகூர்நகர் அருகில் பகுதிகுழு செயலாளர் ஜா. நரசிம்மன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டசெயற்குழு உறுப்பினர் ஆர். சசிகலா மற்றும் பகுதிகுழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மீனாம்பாள் புரம் பகுதிகுழு சார்பில் மீனாட்சிபுரத்தில் பகுதிகுழு செயலாளர் ஏ. பாலு தலைமையிலும், செல்லூர் 60 அடி ரோட்டில் பகுதிகுழு உறுப்பினர் எஸ். சரண் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ. ரமேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் கே. அலாவுதீன் உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர்.