பட்ஜெட் கூட்டத் தொடருக்கான குடி யரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி
புதனன்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “குடியரசுத் தலைவர் உரை மிகவும் சிறப் பாக இருந்தது. அனைவருக்குமானதாக இருந்தது. அனைவருக்கும் வளர்ச்சி என்பதை சிலரால் புரிந்துகொள்ளவும் முடியாது; ஏற்றுக்கொள்ளவும் முடி யாது. குடும்ப நலனே முக்கியம் என்பது காங்கிரஸ் கட்சியின் மாடல். நாட்டின் நலனுக்கு முன்னுரிமை என்பதே பாஜக வின் மாடல். மக்கள் எங்கள் மாடலின் வளர்ச்சியை பரிசோதித்து புரிந்து கொண்டு ஆதரவு அளித்துள்ளனர். வளர்ச்சி மீதான நம்பிக்கையால்தான் மக்கள் எங்களை 3ஆவது முறையா கத் தேர்வு செய்துள்ளனர். இரு அவைக ளிலும் மகளிருக்கு இடஒதுக்கீடு தந்தது பாஜக அரசுதான். புதிய நாடாளு மன்றத்தில் முதல் நடவடிக்கையாக மக ளிருக்கான இடஒதுக்கீடு உறுதி செய் யப்பட்டது எனக் கூறினார்.