மதுரை, பிப். 4 - திருப்பரங்குன்றத்தை கலவரக் காடாக்கும் வகையில், இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட சங்-பரிவாரக் கும்பல் தீட்டிய சதித் திட்டம் மக்களின் ஒற்று மையாலும், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாலும் முறியடிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் காலம் காலமாக ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி கொடுப்பது வழக்கமாக உள்ளது. ஆனால், இந்து முன்னணி உள்ளிட்ட சங்-பரிவார் கூட்டத்தின் மிரட்டல் கார ணமாக, கந்தூரி கொடுப்பதற்கு திடீ ரென காவல்துறையினர் தடை விதித்த னர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இதனிடையே கந்தூரியையே ஒரு காரணமாக வைத்தும், திருப்பரங் குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும், கந்தூரிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் திருப்பரங்குன் றத்தில் செவ்வாயன்று (பிப். 4) மாலை 3 மணிக்கு போராட்டம் நடத்தப் போவ தாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் அறி வித்து இருந்தார். இதற்காக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, அகில பாரத அனுமன் சேனா உள்ளிட்ட சங்-பரிவார் கூட்டத்தினர், தமிழகம் முழுவதும் சென்று கலவரத்திற்கு ஆட்களைத் திரட்டினர். திருப்பரங்குன்றத்தில் வசிக்கும் இந்து- முஸ்லிம்களுக்குள் எந்த பிரச்ச னையும் வராத நிலையில், கந்தூரி கொடுப்பதற்கு திருப்பரங்குன்றத்தி லுள்ள இந்துக்கள் யாரும் எதிர்ப்பு தெரி விக்காத நிலையில், சங்-பரிவாரங்கள் கலவரத்தை தூண்ட முயற்சிப்பதால் அதனைத் தடுக்க வேண்டும் என்று திருப்பரங்குன்றத்தில் வசிக்கும் இந்து, முஸ்லிம் உள்ளிட்ட அனை த்துத் தரப்பு மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, அதிமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தன.
இதனையொட்டி பிப்ரவரி 3, 4 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். திருப்பரங்குன்றம் மலைக்கு யாரும் செல்ல முடியாதபடி நீண்ட தூரம் நூற்றுக்கணக்கான இரும்பு தடுப்புகள் கொண்டு காவல்துறையினர் பாதுகாப்பு வேலியும் அமைத்தனர். இதேபோல பழனியாண்டவர் கோவில் படிக்கட்டு பாதையிலும் இரும்பு தடுப்பு கள் போட்டனர். மலை மீதும், மலையை சுற்றியும் பலத்த காவல்துறை பாது காப்பு போடப்பட்டு இருந்தது. திருப்பரங்குன்றம் நகரின் நுழைவு வாயிலான தோராண வாயில் வளா கத்தில் தடுப்பு அமைக்கப்பட்டு இருந் தது. இதேபோல 16 கால் மண்டபம் 4 ரதவீதி சந்திப்பிலுமாக நாலாபுறமும் இரும்பிலான தடுப்பு பாதுகாப்பு வேலி கள் அமைக்கப்பட்டு போலீஸ் குவிக்க ப்பட்டு இருந்தது.
கடைகள் அடைப்பு
பெரியரதவீதி, கீழரதவீதி, மேலரத வீதி உள்ளிட்ட தேரோடும் வீதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் கடைகள் அடைக்கப்பட்டன. கோவில் வளாகத் தில் மட்டும் பூக்கடை மற்றும் தேங்காய், பழக்கடைகள் திறந்து இருந்தது. சன்னதி தெரு வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில், காலை 9 மணியள வில் இருந்து 11 மணி வரை 16 கால் மண்டபம் மற்றும் பெரிய ரதவீதி பகு தியில் 2 பேர் மற்றும் 4 பேர் என்று தனித் தனியாக வந்தவர்களை 5 கட்டங்களாக 25-க்கும் மேற் பட்டோரை போலீசார் கைது செய்து திருநகர் பகுதியில் தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். பகல் 12.30 மணியளவில் கோவிலுக்குள் உள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் திடீரென்று தேனியை சேர்ந்த பாஜக, இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் திடீரென கூச்சலிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். அவர்களையும் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். ஒட்டுமொத்தமாக சுமார் 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில், மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்வதற்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அனுமதி வழங்கிய நிலையில், வாகனங்கள் மூலம் அங்கு சென்ற சங்-பரி வாரக் கூட்டத்தினர், அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.