tamilnadu

img

வட மாவட்டங்களில்  வெயில் கடுமையாக இருக்கும்!

வட மாவட்டங்களில்  வெயில் கடுமையாக இருக்கும்!

சென்னை, ஏப்.10- சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களுக்கு வெயில் கடு மையாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “ரயலசீமா மற்றும்  கர்நாடகத்தின் உள்புறப் பகுதிகளின் வடமேற்கிலிருந்து வரும் வறண்ட காற்று, தமிழகத்தில் வேலூர், ராணிப் பேட்டை, காஞ்சிபுரம், சென்னை (மேற்கு உள்புறம்), திருவள்ளூர் மாவட்டங் களை வந்தடையும். இதனால் இப்பகுதி களில் அடுத்த 5 நாள்களுக்கு வெப்ப நிலை அதிகரிக்கும். குறிப்பாக வருகிற  வெள்ளி மற்றும் சனிக்கிழமை (ஏப்.11, 12) மிகவும் வெப்பமாக இருக்கும். சென்னை மீனம்பாக்கம் இந்த ஆண்டில் முதல்முறையாக 40 டிகிரி செல்சியஸை பதிவு செய்யக் கூடும். வேலூரில் 41+ டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ஏப்.10 அன்று சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார  மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம்  அதிகமாக காணப்பட்டது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.