விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, செப்.18- விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் 21 ஆயிரம் ரூபா யில் இருந்து 22 ஆயிரமாக ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங் களுக்கான மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் 11,500 ரூபாயில் இருந்து 12 ஆயி ரம் ரூபாயாக உயர்த்தப் பட்டுள்ளது. மேலும் வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோ தரர்கள், மன்னர் முத்துராம லிங்க விஜய ரகுநாத சேது பதி, வ.உ.சிதம்பரனார் ஆகி யோரின் வழித்தோன்றல் களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஓய்வூதியமும் உயர்த்தப்பட்டுள்ளது. விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு மாநில அரசு, 1966 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி முதல் அரசியல் ஓய்வூதி யத் திட்டத்தை செயல் படுத்தி வருகிறது. ஆரம்பத் தில் மாதத்திற்கு 50 ரூபாய் வழங்கப்பட்டு, படிப்படியாக உயர்த்தப்பட்டு 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் 21 ஆயிரம் ரூபா யாக உயர்த்தப்பட்டது. 2025 ஆக.15 ஆம் தேதி நடைபெற்ற 79 ஆவது சுதந்திரத் திருநாள் விழா வின்போது, முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளி யிட்டிருந்தார். இந்த ஓய்வூ திய உயர்வு 2025 ஆம் ஆண்டு ஆக.15 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்து உள்ளது. இதற்காக கூடுத லாக ரூ.27,63,750 நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டு உள்ளது.