tamilnadu

img

பிப். 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! பட்ஜெட் குறித்து ஆலோசனை

பிப். 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! பட்ஜெட் குறித்து ஆலோசனை

சென்னை, ஜன. 30 - தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர், ஜனவரி 20 அன்று துவங்கியது. முதல் நாள் ஆளுநர் உரை நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்எல்ஏ-க்கள் விவாதித் தனர். ஜனவரி 24 அன்று முதல்வரின் பதிலுரைக்குப் பின், தேதி குறிப்பிடா மல் சட்டப்பேரவை அலுவல்கள் ஒத்தி வைக்கப்பட்டன. பட்ஜெட் தாக்கலுக்காக பிப்ரவரியில் சட்டப்பேரவை மீண்டும் கூட உள்ளது.  இந்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், முழு பட்ஜெட் அல்லாமல், இடைக்கால பட்ஜெட்டே தாக்கல் செய்யப்படும் என்பதால், அதுதொடர்பாக ஆலோசிப்பதற்காக, பிப்ரவரி 5 அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 13, 14 அல்லது பிப்ரவரி மூன்றாம் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து, அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.