காந்தி, ப.ஜீவானந்தம் சிலை - நினைவு மண்டபம் திறப்பு
விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய பொதுவுடைமை இயக்கத் தலைவருமான தோழர் ப.ஜீவானந்தம் அவர்களை சிவகங்கை மாவட்டம், சிராவயல் கிராமத்திற்குச் சென்று மகாத்மா காந்தி சந்தித்த நிகழ்வுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் இருவரின் உருவச் சிலையுடன் கட்டப்பட்டுள்ள நினைவு மண்டபத்தை ஜனவரி 30 அன்று நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மெய்யநாதன், ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், மூத்த தலைவர் இரா.முத்தரசன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், சிவகங்கை நகர்மன்ற தலைவர் துறை ஆனந்த், மானாமதுரை நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, காரைக்குடி மாநகர மேயர் குணசேகரன், திருபுவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் பொற்கொடி, சிபிஎம் மாவட்ட செயலாளர் மோகன், சிபிஐ மாவட்ட செயலாளர் சாத்தையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
