மதுரை, 07-
அஞ்சலக கணக்கர் தேர்வில், தேர்வு எழுதும் மொழிகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019ஆம்ஆண்டு நடைபெற்ற அஞ்சலக தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே கேள்விகள் இடம்பெற்றன. ஒரு மாநிலத்தின் மொழியை அதே மாநிலத்தில் மத்திய அரசு புறக்கணித்திருப்பதை எப்படி ஏற்று கொள்ள முடியும் என கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், இனிவரும் அஞ்சலக தேர்வுகளில் ஆங்கிலம், இந்தி மொழிகளுடன் தமிழிலும் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், வரும் பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற உள்ள அஞ்சலக கணக்கர் தேர்வுக்கான மொழி பட்டியல் வெளியாகியுள்ளாது. அதில் ஆங்கிலம், இந்தி மட்டுமே இடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கூறுகையில், அஞ்சலக தேர்வுகள் தமிழிலும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் புதிதாக நடத்தப்பட உள்ள அஞ்சலக துறை சார்ந்த சில தேர்வுகளுக்கு தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது கொடுத்த வாக்குறுதியை மத்திய அரசு மீறுகிறது. என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.