tamilnadu

img

விரைவில் பூமிக்குத் திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்

விரைவில்  பூமிக்குத் திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்

கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்  லைனர் விண்கலத்தில் விண் ணுக்கு அனுப்பப்பட்ட இந்திய வம்சா வளி அமெரிக்க விண்வெளி வீராங் கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச்  வில்மோர் (அமெரிக்கா) ஆகிய இரு வரும் சர்வதேச விண்வெளி நிலை யத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு வரு கின்றனர். விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஆராய்ச்சி பயணம்  முடிந்த பின்பும் அவர்களால் திட்டமிட்ட படி 2024 செப்டம்பர் மாதம் பூமிக்கு திரும்ப  முடியாமல் போனது. தொடர்ந்து அவர்களை பூமிக்கு அழைத்துவர ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்து டன் நாசா கைகோர்த்தது. அதன்படி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் -9 ரக ராக்கெட் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட்டில் 4 விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்ட நிலையில், 29 மணிநேர பயணத்திற்குப் பிறகு சர்வதேச விண் வெளி நிலையத்துடன் ஸ்பேஸ் எக்ஸ்  விண்கலன் இந்திய நேரப்படி ஞாயிறன்று  காலை வெற்றிகரமாக இணைந்தது. விண்வெளி நிலையத்திற்குள் நுழைந்த 4 வீரர்களையும் சுனிதா வில்லி யம்ஸ், பட்ச் வில்மோர் உள்ளிட்ட விண்வெளி வீரர்களை உற்சாகத்துடன் வரவேற்றனர். 4 பேரும் அங்கு தங்கி யிருந்து ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ள  நிலையில், சுனிதா வில்லியம்ஸ், பட்ச்  வில்மோர் ஆகிய இருவரும் அடுத்த சில  நாட்களில் பூமிக்கு அழைத்துவரப்பட  உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.