அயோத்தி வழக்கு குறித்து கடவுளிடம் தீர்வு கேட்டேன் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியிருந்ததை அடுத்து அருள்வாக்கு வழங்க நீதிமன்றம் எதற்கு என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
புனே மாவட்டத்தில் உள்ள கன்ஹேர்சர் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசுகையில், "நீதிமன்றத்தில் எங்கள் முன்பு வரும் பல வழக்குகளுக்கு என்ன முடிவு எடுப்பது என்றே புரியாத நிலை வந்துள்ளன. அதுபோன்ற ஒரு வழக்கு தான் அயோத்தி வழக்கு. இந்த வழக்கு குறித்து கடவுள் முன் அமர்ந்து, தீர்வு கேட்டு வேண்டினேன். கடவுள் மீது நம்பிக்கை வைத்தால், நிச்சயம் தீர்வு கிடைக்கும்" என்று பேசியுள்ளார்.
தலைமை நீதிபதி சந்திரசூட்டின் இந்த பேச்சுக்கு, "அப்படியென்றால் நீங்கள் வழங்கியது சட்டத்தின் தீர்ப்பல்ல..! அருள்வாக்கு. அருள்வாக்கு வழங்க நீதிமன்றம் எதற்கு?" என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.