tamilnadu

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மாணவர் சங்கம் வரவேற்பு

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மாணவர் சங்கம் வரவேற்பு

ஆளுநருக்கு எதிரான சட்டப் போராட்டம்

தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு எதிராக  சட்டப் போராட்டம் நடத்தி உச்சநீதிமன்றத்தில் வெற்றி பெற்றிருக்கும் சிறப்பு மிக்க தீர்ப்பை இந்திய மாணவர் சங்கம் வரவேற்கிறது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலை வர் தௌ.சம்சீர் அகமது, மாநில பொதுச் செய லாளர் கோ.அரவிந்தசாமி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்ப தாவது:  தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய 10 மசோதாக்களுக்கு நீண்ட காலமாக ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலுக்கு உச்ச நீதிமன்றம் தனது கடும் கண்டனத்தை தெரி வித்ததோடு, சிறப்பு சட்டம் பிரிவு 142ஐ பயன்படுத்தி அம்மசோதாக்களுக்கு ஒப்பு தலையும் வழங்கியுள்ளது.  தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப் பேற்ற நாளிலிருந்தே, தமிழ்நாட்டின் நலன் களுக்கு எதிராகவும் அரசியல் அமைப்புச்  சட்டத்திற்கு புறம்பாகவும் தொடர்ச்சியாக செயல்பட்டும் பேசியும் வந்து கொண்டிருக் கிறார். அப்படி ஆளுநர் ரவி அவர்கள் பேசி யது எதேச்சையான, தன்னிச்சையான செயல் பாடு அல்ல; பாஜக ஆட்சி அதிகாரத்தில் இல்லாத தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங் களில் ஆளுநர்கள் மூலம் மாநில அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டு அரசை செயல்பட விடாமல் அத்தனை முட்டுக்கட்டைகளையும் போட்டது பாஜக  அதிலும் தமிழக ஆளுநர் ரவி அவர்கள், தான் ஒரு ஆளுநர் என்கிற நிலையில்  இருந்து இறங்கி ஆர்எஸ்எஸ்-இன் இந்துத்துவ  பிளவுவாத கருத்துகளை பிரச்சாரம் செய்யும்  ஒரு நபராகவே, தான் பொறுப்பேற்ற அன்றி லிருந்து செயல்பட்டு வருகிறார். பல்கலைக் கழகங்களின் வேந்தர் என்ற முறையில் கல்வி நிலையங்களில் அறிவியலுக்கு புறம்பான  ஆன்மீக கருத்துகளை தொடர்ந்து பேசி வருவ தோடு, அரசியல் சாசனத்தின் மாண்புகளை மீறி  தன்னிச்சையாக செயல்படுவதையும் வாடிக் கையாகக் கொண்டிருக்கிறார். ஆளுநர் அவர்கள், பல்கலைக்கழக வேந்தர் என்ற அடிப்படையில் பல்கலைக் கழக துணைவேந்தர் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் தொடர்ச்சியாக காலம் தாழ்த்தி வருவதை கண்டித்தும், தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக வளர்ச்சியில் எந்த ஒரு பங்களிப்பும் செலுத்தாமல் அதை பின்னுக்கு இழுத்துச் செல்லும் நோக்கில் ஆர்எஸ்எஸ் நபர்களை பதவிகளில் அமர வைப்பதற்கு துடிக்கும் அவரின் செயல்பாடுகளை கண் டித்தும் இந்திய மாணவர் சங்கம் தொடர் போ ராட்டங்களை தமிழ்நாட்டில் நடத்திக் கொண்டிருக்கிறது.  இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு  தமிழ்நாடு அரசு மாநில பல்கலைக்கழகங் களை பாதுகாக்கும் வகையில், சட்டமன்றத்தில்  பல்கலைக்கழகத்தின் வேந்தராக தமிழ்நாட்டின்  முதல்வரே இருப்பார் என சட்ட மசோதாவை கொண்டு வந்தது. அதனை பாஜக சட்ட மன்ற உறுப்பினர்கள் எதிர்த்தனர். தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறை வேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி, தொடர்ந்து அரசியல் உள்நோக்கத்தோடு ஒப்பு தல் அளிக்காமல் காலம் கடத்தி வந்ததால், தமிழ்நாடு அரசு ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்தும், சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொ டர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்ற நீதிபதிகள் ஆளுநரின் நடவடிக்கை சட்டவிரோதமானது, தன்னிச்சையானது என்று கூறி தீர்ப்பளித்துள்ளனர். மேலும் ஆளு நரின் செயல்பாடுகளை கண்டிக்கவும் செய்து உள்ளனர்.    வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தீர்ப்பை  வழங்கியதன் மூலம் உச்ச நீதிமன்றம் அரசிய லமைப்புச் சட்டத்தையும், மாநில உரிமை களையும் நிலைநாட்டி இருக்கிறது. உச்சநீதி மன்றம் வழங்கிய இத்தீர்ப்பை இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநிலக் குழு  வரவேற்கிறது.  மேலும் ஆளுநர் வரம்புகளை மீறி மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் நியமித்த ஆர்எஸ்எஸ் சார்பு சிண்டிகேட், செனட் உறுப்பினர்களின் நியமனத்