சட்டப்படி விசாரணை கோரி மாணவர் சங்கம் போராட்டம்
சென்னை தரமணியில் உள்ள டாக்டர் தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரியில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மாணவி விவகாரத்தில் சட்டப்படி விசா ரணை நடத்த வேண்டுமென இந்திய மாண வர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலை வர் தௌ.சம்சீர் அகமது, செயலாளர் கோ. அரவிந்தசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: மார்ச் 21 அன்று ஒரு மாணவி கல்லூரி சாராத நபர்களால் பாலியல் துன்புறுத்த லுக்கு உள்ளாக்கப்பட்டார். அடுத்த நாளே அந்த மாணவியை நிர்வாகம் விடுதியி லிருந்து வெளியேற்றியது. மாணவிகளின் கைப்பேசிகளை பறிமுதல் செய்து, பாதிக்கப் பட்ட மாணவியின் தொடர்பை நீக்க வற்புறுத் தியது. கல்லூரி, இச்சம்பவத்தை மூடி மறைக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந் துள்ளது. மார்ச் 25 அன்று கல்லூரி வளாகத்தில் நடந்த போராட்டத்தில், மாணவி காணாமல் போனது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்படவில்லை. “மாணவியின் நடத்தை சரியில்லை” என்ற காரணத்தை முன் வைத்து விடுதியிலிருந்து நீக்கப்பட்டார். “நிர்பயா சட்டம்”, “போக்ஸோ சட்டம்” மற்றும் “சிறார் நீதிச் சட்டம்” ஆகியவற்றின் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. சிறார் நலத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்படவில்லை.
மருத்துவ மற்றும் மனநல ஆய்வாளர்களின் அறிக்கை பெறப்படவில்லை உள்ளிட்ட விதிமீறல்கள் உள்ளன. விசாரணை அதிகாரியுடனான பேச்சு வார்த்தையில் திருப்திகரமான பதில்கள் கிடைக்காததால் போராட்டம் தொடர்ந்தது. அப்போது, காவல்துறையினருக்கும் மாண வர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரரை பேச்சுவார்த்தை நடந்த இடத் திற்கே அழைத்து வந்தது கண்டனத்திற் குரியது ஆகும். காவல் ஆய்வாளரின் உறுதிமொழியின் பேரில் மார்ச் 27 ஆம் தேதி உரிய அதி காரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டு, தற்காலிகமாக போராட் டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சில தனியார் தொலைக்காட்சி நிறுவ னங்கள் இச்சம்பவத்தை திரித்து காட்டு வதாகவும், ஊடகங்கள் பொறுப்புடன் செய்தி களை வெளியிட வேண்டும் என்றும் மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.