tamilnadu

img

நகம் வெட்டாததால் பட்டியலின மாணவர் மீது தாக்குதல்

நகம் வெட்டாததால் பட்டியலின மாணவர் மீது தாக்குதல்

அரசுப் பள்ளி ஆசிரியரை கைது செய்ய தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

சாதி பெயரைச் சொல்லி மாண வரை தாக்கிய அரசுப் பள்ளி ஆசிரி யரை கைது செய்ய வேண்டுமென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு  தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநிலத் தலைவர் த.செல்லக் கண்ணு, பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ் ஆகியோர் விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: தென்காசி மாவட்டம், திருவேங் கடம் இந்திரா நகர் பட்டியலினத் தைச் சேர்ந்த காளிராஜ் என்பவரின்  மகன் சந்தோஷ். திருவேங்கடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  19.3.2025 அன்று பள்ளிக்குச் சென்ற  மாணவரை ஆசிரியர் கருத்தப் பாண்டியன் கையில் இருந்த நகங்களை வெட்டி வரக் கூறி யுள்ளார். தொடர்ந்து, அருகில் இருந்த  மாணவரிடம் நகவெட்டியை வாங்கி வெட்டும்போது சதை யையும் சேர்த்து வெட்டியதால் ரத்தம் வந்துள்ளது. எனவே, மீதியை  நாளை வீட்டில் சென்று வெட்டி வரு கிறேன் எனக் கூறியுள்ளார் மாண வர். “உன்னால் இப்போதே உட னடியாக வெட்ட முடியாதோ?” எனக் கேட்டு, மாணவரின் கழுத் தைப் பிடித்து நெரித்து சாதியின் பெயரைச் சொல்லி திட்டி, பிவிசி ரப்பர் பைப்பைக் கொண்டு கடு மையாக தாக்கியுள்ளார். இதனால்  படுகாயம் அடைந்த சந்தோஷ்  சங்கரன்கோவில் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அரசுப் பள்ளியில் ஆசிரிய ரால் நடத்தப்பட்ட இந்த வன்கொ டுமை செயலை தீண்டாமை ஒழிப்பு  முன்னணி வன்மையாகக் கண்டிக் கிறது.  அரசு மருத்துவமனையில் மாணவர் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது, அப்பள்ளி யின் பிற ஆசிரியர்கள் மாணவரின் பெற்றோரை சந்தித்து இத்துடன் பிரச்சனையை விட்டு விடுங்கள். தொடர்ந்து உங்கள் மகன் அப்பள்ளியில் படிக்க வேண்டும். நீங்கள் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால், பிற ஆசிரியர்கள் முறையாக அவ னுக்கு பாடம் சொல்லித் தர முடி யாது என பேசியுள்ளனர். இதனை  குற்றவாளிக்கு ஆதரவாக, பிற  ஆசிரியர்கள் மாணவரின் குடும் பத்தை மிரட்டிய செயலாகவே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கருதுகிறது. மேலும் அரசு மருத்துவமனை யில் அந்த மாணவர் வலியால் துடித்த போது, எக்ஸ்ரே-வை கூட  அரசு மருத்துவமனைக்குள் எடுக்காமல், வெளியில் எக்ஸ்ரே  எடுத்து வரச் சொல்லி மருத்து வர்கள் நிர்பந்தித்துள்ளனர். வெளியில் எடுத்து வந்த எக்ஸ்ரேயில் ஒன்றும் இல்லை எனக் கூறி போதுமான சிகிச்சை அளிக்காமல், 21.3.2025 அன்று மாணவரை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். இப்போது அந்த மாணவருக்கு, தனியார் மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்ததில், கை மணிக் கட்டு எலும்பில் கீறல் விழுந்திருப் பது தெரிய வந்துள்ளது. தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆசிரியர் கருத்தப்பாண்டியன் மீது திருவேங்கடம் காவல் நிலைய  குற்ற எண்: 93/2025 u/s 115(2) BNS  மற்றும் எஸ்.சி/எஸ்.டி வன்கொடு மைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. 6  நாட்கள் ஆகியும் இதுவரை அவரை  கைது செய்யவில்லை.  ஆகவே உடனடியாக ஆசிரியர்  கருத்தப்பாண்டியனை கைது செய்ய வேண்டுமென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது. மேலும் குற்ற வாளிக்கு ஆதரவாக அவரது பெற்றோர்களை மிரட்டிய ஆசிரி யர்கள் மீதும், உரிய சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள் மீதும்  சட்டப்படியாகவும், துறை ரீதியாக வும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என தமிழ்நாடு அரசை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது. பாதிக்கப்பட்ட மாணவரையும் அவரது குடும்பத்தினரையும் தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் துணை பொதுச் செயலாளர் பி. சுகந்தி, தென்காசி சிபிஐ(எம்) மாவட்ட செயற்குழு உறுப்பினர்  பி.அசோக்ராஜ், திருவேங்கடம் இடைக்கமிட்டி செயலாளர் எஸ். கருப்பசாமி உள்ளிட்ட தலை வர்கள் சந்தித்து விபரங்களை கேட்டு அறிந்தனர். மேலும், சட்ட ரீதியான உதவிகளை அவர்களுக்கு  செய்து தருவதாக உறுதியளித்த னர். இவ்வாறு அவர்கள் தெரி வித்துள்ளனர்.