இந்தியா உட்பட ஆசிய நாடுகளில் பங்குச் சந்தைகள் கடும் சரிவு!
டிரம்ப் வரி விதிப்பு நடவடிக்கை எதிரொலி:
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின், வர்த்தகப் போர் மற்றும் வரி விதிப்பு நடவடிக்கை எதிரொலியாக இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் திங்கட்கிழமை யன்று பங்குச் சந்தைகள் கடு மையான வீழ்ச்சியை சந்தித்தன. அமெரிக்க ஜனாதிபதி டொ னால்டு டிரம்ப், உலக நாடுகளின் மீது 10 சதவித அடிப்படை வரி விதித்தார். அதுதவிர ஏப்ரல் 2 அன்று மனிதர்களே இல்லாத பென்குயின்கள் மட்டுமே உள்ள அண்டார்டிகா உட்பட சுமார் 150 நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிக்கும் உத்தரவிற்கு கையெ ழுத்திட்டார். இதற்கு பதிலடியாக அமெ ரிக்கப் பொருட்களுக்கு சீனா கூடு தல் வரி விதித்தது. இதனால் சர்வ தேச அளவில் வர்த்தகப் போர் வெடிப்பதற்கான சாத்தியக்கூறு கள் அதிகரித்தன. இதுபோன்ற காரணங்களால் பங்குச் சந்தையில் முதலீடு செய்தி ருந்த முதலீட்டாளர்கள், தங்களின் பங்குகளை அதிகளவில் விற் பனை செய்ததால் சர்வதேச அளவில், பங்குச் சந்தைக ளின் வர்த்தகம் வார வர்த்தகத்தின் முதல் நாளான திங்கட்கிழமை யன்றே வரலாறு காணாத சரிவை சந்தித்தது. இந்திய பங்குச் சந்தைளில், திங்கட்கிழமை காலையில் பங்கு வர்த்தகம் பலத்த சரிவுடனேயே துவங்கியது. குறிப்பாக மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் வர்த்த கத்தின் இடையே 3,900 புள்ளிக ளுக்கு மேல் சரிவடைந்தது. வர்த் தக நாளின் இறுதியில் சென் செக்ஸ் 2,226.79 புள்ளிகள் சரிந்து 73,137.90 புள்ளிகளில் நிலை கொண்டது. உலக நாடுகளின் மீது டிரம்ப் விதித்த வரிகள், ஒரு பொரு ளாதார அணுசக்திப் போரையே கட்டவிழ்த்து விட்டது. ஒரே நேரத்தில் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மற்றும் எதிரியாக கருதும் நாடுகளின் மீது, வரிகள் விதித்து ஒரே நேரத்தில் உலகளா விய பொருளாதாரப் போரைத் துவங்குவதன் மூலம் அமெரிக்கா வில் வணிகம் செய்வதற்கான நம்பிக்கையை, டிரம்ப் அழித்து விட்டார் எனவும் முதலீட்டாளர்கள் தரப்பில் விமர்சனங்கள் எழுந் துள்ளன. பங்குச் சந்தை முதலீட்டா ளர்களைப் பொறுத்தவரை, ஆசியப் பங்குச்சந்தைக்கு இது ஒரு ‘கருப்புத் திங்கள்’ ஆக மாறி யுள்ளது. ஹாங்காங் பங்குச்சந்தை 8.7 சதவிகிதம், சிங்கப்பூர் 7 சத விகிதம், ஜப்பான் 6 சதவிகிதம், சீனா 5.5 சதவிகிதம், மலேசியா 4.2 சதவிகிதம், ஆஸ்திரேலிய பங்குச்சந்தை 4.1 சதவிகிதம், பிலிப்பைன்ஸ் 4 சதவிகிதம், நியூ சிலாந்து பங்குச்சந்தை 3.6 சத வீதம் என அனைத்து பங்குச்சந்தை களுமே நாள் முழுவதும் தொடர் சரிவை சந்தித்துள்ளன. இந்திய (மும்பை) பங்குச்சந்தையில் (BSE) பட்டி யலிடப்பட்ட அனைத்து நிறுவ னங்களின் சந்தை மூலதனமும் சரிவை சந்தித்தது. இதனால் மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் 403.34 லட்சம் கோடியிலிருந்து 389.25 லட்சம் கோடியாகக் குறைந்தது. இந்த வீழ்ச்சியின் கார ணமாக இந்திய பங்குச்சந்தை முத லீட்டாளர்கள் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய்களை இழந்துள்ள னர். அதேபோல தேசிய பங்குச் சந்தையில் (NSE) உள்ள முக்கிய மான 13 துறைகளும் பெரும் சரிவை சந்தித்துள்ளன. டிரம்பின் வரிவிதிப்பு என்ற வர்த்தகக் கொள்கைகளின் தாக்கம், திங்கள் அன்று உலகம் முழுவதும் உணரப்பட்டது. குறிப்பாக ஆசிய பங்குச்சந்தைகள் கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே நாளில் மிக மோசமாக சரிந்துள்ளன. டிரம்பின் வரி விதிப்புகளால் உருவான தாக்கம், அவரது வர்த்த கக் கொள்கைகளின் மிகப்பெரிய இழப்புக்களில் ஒன்றாக உரு வெடுத்துள்ளது. பங்குச்சந்தைகளில் பில்லி யன் கணக்கில் முதலீடு செய்யும் கோடீஸ்வரரான பில் அக்மே னின், “டிரம்ப் ஒரு ‘பொருளாதார அணு ஆயுதப் போரில்’ இறங்கும்போது, அவர் அமெரிக் கப் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையை அழித்து, அந் நாட்டில்/நாட்டின் நிறுவனங்க ளில் முதலீடு செய்யும் முத லீட்டாளர்களை அந்நியப்படுத்தும் அபாயம் உள்ளது” என விமர் சித்துள்ளார்.
டிரம்பை கண்டித்து அமெரிக்கா முழுவதும் போராட்டம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பைக் கண்டித்து, அந்நாட்டின் 50 மாகாணங்களில் சுமார் 1200 இடங்களில் லட்சக்கணக்கான மக்கள் போராட்டம் பேரணி - ஆர்ப்பாட்டங்களை நடத்தி யுள்ளனர். தொழிற்சங்கங்கள், சிவில் சமூக உரிமைக் குழுக்கள், பால் புதுமையினர் அமைப்புகள், தேர்தல் சீர்திருத்த ஆர்வ லர்கள் உட்பட 150-க்கும் மேற்பட்ட அமைப்புகளின் ஆதரவுடன் இந்த போராட்டங்கள் நடந்துள்ளன. டிரம்ப் மற்றும் எலான் மஸ்க்-கின் பணிநீக்க நடவடிக்கை மீது போராட்டக் காரர்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர். மேலும் அகதிகளுக்கு எதிரான நடவடிக்கை, பொருளாதாரம் மற்றும் மனித உரிமைகள் பிரச்சனை களைப் பற்றி, பேசிய அவர்கள், அமெரிக்காவை சுயநலவாதிகளின் குழுக்கள் ஆளுகின்றன எனவும் அவர்க ளது ஆதிக்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த போராட்டப் பேரணி, அமெரிக்கா மட்டுமின்றி பல ஐரோப்பிய நாடுகளின் தலைநகரங்களுக்கும் பரவியுள்ளது. அங்கும் போராட்டக்காரர்கள் டிரம்ப் மற்றும் அவரது கடுமையான வர்த்தகக் கொள்கைகளுக்கு எதிராக தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். டிரம்ப் செய்து வருவது பொருளா தார பைத்தியக்காரத்தனம் எனவும் அவர் உலகத்தையே பொருளாதார மந்த நிலைக்குள் தள்ளப் போகிறார் எனவும், அவர் ஒரு அரசியலமைப்பு நெருக்கடி யைத் தூண்டிவிட்டுள்ளார் எனவும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.