மாநிலங்களுக்கு முழு நிதி சுயாட்சி தேவை காமன்வெல்த் மாநாட்டில் பேரவை தலைவர் அப்பாவு வலியுறுத்தல்
சென்னை, செப்.13 - கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 11 ஆவது காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் இந்திய பிராந்திய மாநாடு நடை பெற்றது. இதில் தமிழகம் சார்பில் சட்டப் பேரவை தலைவர் அப்பாவு, துணைத் தலைவர் பிச்சாண்டி ஆகியோர் பங்கேற்றனர். மாநாட்டில் அப்பாவு பேசியதாவது: அமைதி, வளம், வளர்ச்சி ஆகிய மூன்றும் இருந்தால்தான், மாநிலங்கள் சிறப்பாக இருக்க முடியும் என்ற அடிப்படையிலேயே இந்திய அரசியலமைப்பு சட்டம் வடிவமைக் கப்பட்டுள்ளது. சமீப காலமாக, அரசியல மைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள் ளப்படாமல், நிர்வாக ரீதியான அறிவிப்புகள், அரசாணைகள் மூலமாக கனிமவளம், மீன் வளம், கூட்டுறவு சங்கங்களுக்கான அதிகாரங்கள் மாநில அரசுகளிடம் இருந்து பறிக்கப் பட்டுள்ளன. இது கூட்டாட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு. மேலும் ஒன்றிய அரசு, மாநிலங்களின் கருத்தை கவனத்தில் கொள்ளா மல் பொருட்கள் மீது பல்வேறு வரி களை விதிக்கிறது. எந்தவிதமான நிதிப் பகிர்வையும் ஒன்றிய அரசு ஒழுங்காக மேற்கொள்வது இல்லை. ஒருங்கிணைந்த கல்வி (சமக்ர சிக் ஷா) திட்டத்தின்கீழ் மாநில அரசுக்கு தர வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை ஒன்றிய அரசு இதுவரை விடுவிக்கவில்லை. தனியார் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீட் டுக்கான ஒன்றிய அரசின் பங்களிப்பான 60 சத வீத நிதியை கடந்த 4 ஆண்டுகளாக ஒதுக்க வில்லை. இதனால், மக்கள் நல திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மாநில அரசுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது கூறிய கருத்தின் அடிப்படையில், மாநிலங்களுக்கு முழுமையாக நிதி சுயாட்சி வழங்க வேண்டும் அல்லது மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி பங்கை 75 சதவீதமாக உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.