tamilnadu

img

தமிழக மீனவர்கள்- படகுகள் விடுதலையை உறுதி செய்க!

ஒன்றிய அரசுக்கு  சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, நவ. 11 - இலங்கை கடற்படையால் கைது  செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை யும், அவர்களின் படகுகளையும் மீட்பதற்கு ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி  கோரிக்கை விடுத்துள்ளது.  இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் தமது அறிக்கையில் குறிப் பிட்டிருப்பதாவது: இராமேஸ்வரம் மீனவர்கள்  23 பேர் கைது வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர் கள் 23 பேர் இலங்கை கடற்படை யினரால் கைது செய்யப்பட்டு, அவர் களின் விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு மீனவர்களுக்கு எதி ராக தொடர்ந்து இத்தகைய நடவடி க்கைகளை இலங்கை கடற்படை மேற்கொண்டு வருவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வன்மையாக கண்டிக்கிறது.

இதுவரை 485 மீனவர்களை கைது செய்த இலங்கை

2024-ஆம் ஆண்டு துவங்கியதில் இருந்து இதுவரை 485 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 65 படகுகளும் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளன. கைது  செய்யப்பட்டுள்ள மீனவர்கள் காங்கே சன் கடற்படை துறைமுகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நவம்பர் 6 அன்று நடைபெற்ற இந்திய - இலங்கை கடலோரக் காவல் படை அதிகாரிகளின் கூட்டத்தில் மீன வர்களின் பாதுகாப்பு பற்றியும் விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட பின் புலத்தில், நான்கு நாட்களுக்குள்ளாக இந்த கைதுகள் நடைபெற்று இருப்பது பேச்சுக்கும் செயலுக்குமான முரணை வெளிப்படுத்துகிறது.

ஒவ்வொரு நாளும் துயரத்தில் மீனவர் குடும்பங்கள்

இவ்வாறு கைது செய்யப்படும் மீன வர்களுக்கு தாங்கவியலாத பெரும் தண்டத்தொகைகளை இலங்கை நீதி மன்றங்கள் விதிப்பதும், மீனவர்கள் மாதக் கணக்கில் சிறையில் வாடு வதும், வாழ்வாதாரங்களை இழந்து அவர்களது குடும்பங்கள் தவிப்ப துமான மனிதாபிமானமற்ற சூழல் தொடர்ந்து உருவாக்கப்படுகிறது. எனவே, ஒன்றிய அரசு உடனடி யாக தலையிட்டு, கைதாகி உள்ள  தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதை உறுதி செய்யு மாறும், அவர்களின் படகுகளை மீட்டு, திரும்ப ஒப்படைக்குமாறும், தொடர்ந்து இத்தகைய அடாவடி செயல்களில் இலங்கை கடற்படை ஈடுபடாமல் இருக்க அரசு மட்டங்களி லான முயற்சிகளை மேற்கொள்ளவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)  தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.