tamilnadu

img

சிவகங்கை,ஜன.30- கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை மெய்ப்பிக் கின்ற துறைதான்

சிவகங்கை,ஜன.30- கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை மெய்ப்பிக் கின்ற துறைதான் இந்த கூட்டு றவுத்துறை என்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் கூறினார்.   சிவகங்கையில் நடை பெற்ற அரசு விழாவில் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பேசியதாவது:  கிராமங்கள் தொடங்கி பெரு நகரங்கள் வரையில் உள்ள மக்களின் பொருளா தார தேவையை பூர்த்தி செய்கின்ற துறையாக கூட்டுறவுத்துறை விளங்கு கின்றது. எல்லா தொழில்க ளுக்கும் முதலீடு தேவை. தொழில் சிறக்க குறைந்த வட்டியில், சில நேரங்களில் வட்டியும் இல்லாமல் தொழில் நிறுவனங்களுக்கு கூட்டுறவுத்துறை முதலீட்டு கடன்கள் வழங்கி வருகிறது  என்பதை பெருமையோடு நினைவுபடுத்த விரும்புகி றேன். அடித்தட்டு மக்களை பொருளாதார  ரீதியாக உயர்த்துவதற்காக அவர்க ளுக்கு தேவையான நிதி உத விகளை செய்கின்ற அமை ப்பு கூட்டுறவு. 30-க்கும் மேற் பட்ட சேவைகளை கூட்டுற வுத்துறை வழங்கி வரு கின்றது. மாணவ, மாணவி யர்கள் கூட்டுறவுத்துறை யின் மூலம் வேலை வாய்ப்பி னை பெறுவதற்கு பட்டப் படிப்புடன் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பும் அவசியமாகின்றது. இவ்வாறு  அமைச்சர் பேசினார்.