tamilnadu

காவல் நிலையம் முன் விஷம் குடித்த தங்கை உயிரிழப்பு

காவல் நிலையம் முன் விஷம் குடித்த தங்கை உயிரிழப்பு

தஞ்சாவூர் அருகே அண்ணன் கைதுக்கு எதிர்ப்பு

தஞ்சாவூர் அருகே அண்ணன் கைது செய்யப்பட்டதால், காவல் நிலை யம் முன் விஷம் குடித்த தங்கை புதன் கிழமை உயிரிழந்தார். மற்றொரு தங்கை தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தஞ்சாவூர் மாவட்டம், திருவை யாறு அருகேயுள்ள நடுக்காவேரி அரச  மரத்தெருவைச் சேர்ந்தவர் அய்யாவு மகன் அய்யா தினேஷ் (32). இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி உள்பட 13 வழக்கு கள் உள்ளன. செவ்வாய்க்கிழமை காலை தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்குச் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த அய்யா தினேஷை காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பொது இடத்தில் கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறி வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர். அய்யா தினேஷ் மீது பொய் வழக்கு போடக் கூடாது என்றும், அவரை வெளியே விடுமாறும் குடும்பத்தினர் வலியுறுத்தினர். அண்ணன் வெளியே விடப்படாத தால், மனம் உடைந்த தங்கைகளான மேனகா (31), கீர்த்திகா (29) ஆகியோர்  காவல் நிலையம் முன்பு விஷம்  குடித்தனர். இதில், தஞ்சாவூர் மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொறியியல் பட்டதாரியான கீர்த்திகா புதன்கிழமை காலை உயிரிழந்தார். மேனகா தொ டர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். உறவினர்கள் தஞ்சாவூர் மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு திரண்டு சென்று, கோட்டாட்சியர் விசா ரணை நடத்தி தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். நடவடிக்கை எடுக்கப்படும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் கூறிய தால், கீர்த்திகாவின் உடல், உடற் கூறாய்வு கூடத்தில் உள்ளது. காவல் ஆய்வாளர் சர்மிளாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்  தலைவர் ஜியாவுல் ஹக் உத்தர விட்டார். வருவாய் கோட்டாட்சியர் செ. இலக்கியா விசாரணை நடத்த உள் ளார். மாவட்டக் காவல் கண்காணிப் பாளர் ராஜாராம் விசாரணை கமிஷன் அமைத்துள்ளார். உறவினர்கள், ஆய்வாளர் சர்மி ளாவை வன்கொடுமை சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும், அய்யா தினேஷ் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். கீர்த்திகா குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரியுள்ளனர். சிபிஎம் வலியுறுத்தல் இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் விடுத்த அறிக்கையில், “நடுக்காவேரி தலித் தெருவில் வசிக்கும் அருண் என்பவர், அய்யா தினேஷ் மீது கொடுத்த புகாரில் இருவரும் சமாதானம் ஆன போதும், காவல் நிலையத்தினர் புகாரை ரத்து செய்ய முடியாது என  மறுத்து அய்யா தினேஷை கைது செய்தனர். இதனால், கீர்த்திகா, மேனகா ஆகியோர் காவல் நிலை யத்துக்குச் சென்று, “எனக்கு நிச்சய தார்த்தம் நடைபெறுகிறது. எங்க அண்ணனை விட்டு விடுங்கள்” என்று  கெஞ்சியும் ஆய்வாளர் சர்மிளா அவர் களை விரட்டியதால், மனம் நொந்து விஷம் குடித்தனர். உரிய காலத்தில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யாமல், அராஜகமாக நடந்து கொண்ட ஆய்வாளர் சர்மிளா மீது எஸ்.சி, எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். உடனடியாக அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். கீர்த்திகா குடும்பத்திற்கு 20  லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மேனகாவிற்கு உயர்தர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.