மதுரை:
பல ஆயிரம் கோடி ரூபாய் தொழிலாளர்கள் பணத்தை வைத்திருக்கும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம் (இஎஸ்ஐ) மட்டும் கொரோனாதடுப்பூசிகளை கேட்டுப் பெற்று தொழிலாளர்கள் அவர்களது குடும்பங்களை பாதுகாக்கவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பல ஆயிரம் கோடி ரூபாய் தொழிலாளர்களின் பணத்தை வைத்திருக்கும் இஎஸ்ஐ நிறுவனம் எந்தப் பங்களிப்பையும் செலுத்த முன்வரவில்லை.இஎஸ்ஐ மருத்துவமனைக்கு தடுப்பு ஊசி போடுவதற்கான உத்தரவுஏன் வழங்கவில்லை தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்கேள்வியெழுப்புகின்றனர். மதுரை இஎஸ்ஐ மருத்துவமனை 13.4.1971-இல் திறக்கப்பட்டது. 209 படுக்கைகள் கொண்ட இங்கு 18 மருத்துவர்கள் உட்பட 188 பேர்பணியாற்றி வருகின்றனர். சென்னை அயனாவரம், கே.கே.நகர், வேலூர்,சிவகாசி, சேலம், ஒசூர், திருச்சிராப்பள்ளி, மதுரை ஆகிய ஊர்களில் மொத்தம் 1631 படுக்கைகள் உள்ளன. கிட்டதட்ட 200 மருத்துவர்கள் உட்படசுமார் 1,400 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழகம் முழுவதும் 189 இடங்களில் இஎஸ்ஐ மருத்துவமனை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இஎஸ்ஐயின் இணையதளத்தை திங்களன்று திறந்து பார்த்தபோது 18 பக்கத்திற்கு கொரோனா தொடர்பான ஆலோசனைகளும் அறிவுரைகளும் மட்டுமே உள்ளது. நிறுவனம் தடுப்பூசி போடுவதாக ஒரு வரிகூட இல்லை.ஏப்.26-ஆம் தேதி தமிழகத்தில் திருநெல்வேலியில் மட்டும் கொரோனாசிகிச்சையளிக்க 45 படுக்கைகள் உள்ளதாகவும். இதில் 12 படுக்கைகளுக்கு ஆக்ஜிசன் வசதி உள்ளது என இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பூசி இஎஸ்ஐ மருத்துவமனைகளில் செலுத்தப்படுகிறதா என்பது குறித்து மதுரையில் விசாரித்தபோது இல்லை என்றே பதில் கிடைத்தது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தொழிலாளி ஒருவர் இஎஸ்ஐ-நிர்வாகத்தை அணுகியபோது இன்னும் உத்தரவு வரவில்லை எனக் கூறியுள்ளனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகனை திங்களன்று மாலை தொடர்பு கொண்டு கேட்டபோது, நாம் சொன்ன விவரங்களை முழுமையாக் கேட்டுக்கொண்ட அவர் “விசாரிக்கிறேன்” எனக் கூறினார்.தமிழக சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணனை திங்களன்று தொடர்பு கொண்டு பேசியபோது, “கொரோனா தடுப்பூசி மையங்களை எங்கெங்கு அமைக்க வேண்டும் என்பது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி மிகவும் மதிப்புமிக்கது. எங்களதுநோக்கம் தடுப்பூசி வீணாகாமல் அனைவருக்கும் செலுத்தப்படவேண்டும். அதற்கேதுவாக பொருத்தமான இடங்களில் அமைத்துக் கொள்ளலாம். தடுப்பு மையங்கள் அமைப்பது குறித்து அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளவர்களை தொடர்பு கொண்டு உங்களது குறைகளைக் கூறி நிவர்த்தி செய்துகொள்ளுங்கள்” என்றார். தமிழக அரசும், மத்திய அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்குமா?