tamilnadu

img

தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீச்சு பாஜக தலைவர்களின் மநுவாத வெறிப் பேச்சே தாக்குதலுக்கு காரணம்

தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீச்சு பாஜக தலைவர்களின் மநுவாத வெறிப் பேச்சே தாக்குதலுக்கு காரணம்

மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

புதுதில்லி, அக். 6 - உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி  பி.ஆர். கவாய் மீது காலணி வீசப்பட்டி ருக்கும் செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறப்பட்டிருப்பதாவது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி  பி.ஆர். கவாய் மீது காலணி வீசப்பட்டி ருக்கும் செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்க உறுப்பின ரும், தற்போது கைது செய்யப்பட்டிருப்பவ ருமான- அந்த வழக்கறிஞருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோருகிறது. நீதிமன்றம் நடைபெற்றுக் கொண்டி ருக்கையிலேயே தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீசப்பட்டது மிகவும் அதிர்ச்சி யளிக்கிறது மற்றும் வருந்தத்தக்கது. இவ்வாறு காலணி வீசப்பட்ட சமயத்தில், சனாதன தர்மத்திற்கு ஆதரவாக முழக்கங் கள் எழுப்பப்பட்டன. பாஜக முதலமைச்சர் கள், அமைச்சர்கள் மற்றும் தலைவர்களின் சாதிய, மநுவாத மற்றும் மதவெறிக் கருத்து க்களை ஊக்குவிக்கும் சமீபத்திய பேச்சுக் கள் இதுபோன்ற செயல்களுக்கு தைரியம் அளித்துள்ளன. இந்துத்துவா மதவெறி சக்தி களால் சமூகத்தில் செலுத்தப்படும் மநுவாத மற்றும் மதவெறி விஷத்திற்கு இந்த சம்பவம் மற்றோர் எடுத்துக்காட்டு. இது சங்- பரிவாரத்தின் சகிப்பற்ற தன்மையையும், அவர்களின் சித்தாந்தத்திற்கு ஒத்துப் போகாத எந்தவொரு கருத்தையும் ஏற்றுக் கொள்ளாத விருப்பமின்மையையும் பிரதி பலிக்கிறது. ஒன்றிய அரசாங்கம், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கவாய்க்கு உரிய பாது காப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது. அரசாங்கம் சகிப்பின்மையைப் பரப்பும் நபர்கள் மற்றும் அமைப்புகளை உறுதி யாகக் கையாள வேண்டும் என்றும், அதே சமயத்தில் கருத்துச் சுதந்திரத்தையும், கருத்து வேறுபாடு கொள்ளும் உரிமையை யும் பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கோரியுள்ளது.