உன் குரல் வளை நெறிக்கும் அதிகாரங்களின்
கரங்களை முறிக்கும் செங்கொடி கூட்டம்...
நீ எதிர்க்குரல் எழுப்பிட உன்னருகில் நின்று
எங்கள் சித்தாந்தம் ஒலிபெருக்கியை நீட்டும்....
புது வரலாறும் படைத்திடும்
அரிவாள் சுத்தியல் ஜொலித்திடும்....
சாதி, மதவெறிப் பாம்பின் நஞ்சு
எந்நாலும் தீண்டாது எங்கள் குருதி..
துண்டாடி கொண்டாடும் முதலாளி வேந்தரை
செங்கொடி பந்தாடும் இது உறுதி...
Rap:
Workers of the world unite
Get ready for the new class fight
Knowledge தான் நமக்கு weight
நான் சொல்றதை கேளு lightஆ ரைட்...
சிக்கித் தவிக்கும் மீனாய்.
கூண்டில் மாட்டித் தவிக்கும் மானாய்,
உன்னை பாடாய் படுத்துது வாழ்க்கைதான்..
விலையேற்றம் காரணம் கடவுள் அல்ல...
வேலையில்லை... படித்தும் வாய்ப்பு இல்லை
செல்வம் ஒருபக்கம் சேருது நிற்கவில்லை
விடிவில்லை கேட்டால் விளக்கமில்லை
நம் வர்க்கப் போருக்கு மாற்றுமில்லை
லாபவெறி சிந்தனை மூளை உள்ள
ஒரு கூட்டம் கொழுக்குது நமைச் சுரண்டி
அதை மாற்றாமல் எதுவும் மாறாது
எனும் செங்கொடி என்றும் வீழாது....
சாதிவெறி மதவெறி சடங்குகள் அறுத்தெறி சிந்திக்காத மந்தைகளின் தலைமையைத் தகர்த்தெறி ..
உதவாத பேச்சுகளை ஓரமாக தள்ளி வை
மார்க்சியமே மாற்று என்று உரக்க நீ சொல்லி வை.....
என்ன சொன்ன? மார்க்சியம் அழிஞ்சதுன்னா சொன்ன
என்ன சொன்ன? மார்க்சியம் முடிஞ்சுதுனா சொன்ன
என்ன சொன்ன? ஃபாரின் தத்துவம்னா சொன்ன
முடிஞ்சது இல்ல அழிந்தது இல்லை
வாழ்வியல் தத்துவம் தாண்டா இது
சொல்லப்போறேன் கேட்டுக்கோ
உன் மூளையை கழட்டி சேர்த்துக்கோ.
இலவச மருத்துவம் கல்வி இருப்பிடம் வளர்ந்தது வாழ்ந்திட வாழ்க்கை மேம்பட அடித்தளம் அமைத்திட பயன்படும் மார்க்சியம்,
ஏற்றத்தாழ்வை அழிப்பது மார்க்சியம்,
அடிமைச்சங்கிலி உடைப்பது மார்க்சியம்,
உலகை மாற்ற உறைத்தது மார்க்சியம்.
வாக்குரிமை தந்தது யாரு
பெண்ணுக்கு கல்வி கொடுத்தது யாரு விண்ணுக்கு பெண்ணை அனுப்பியது யாரு உழைப்புச் சுரண்டலை தடுத்தது யாரு
ஒடுக்கப்பட்ட மனிதனின் பக்கம்
நின்று என்றும் உழைப்பது யாரு
கண்களை கொஞ்சம் திறந்து நீ பாரு
இடதே மாற்றுனு நீயும் கூறு......
பாடல்: சொல்லிசை தினேஷ், சூர்யராஜ், ராஜேந்திர பிரசாத்