tamilnadu

மாதவிடாயை காரணம் காட்டி தலித் சிறுமியை வகுப்பறைக்கு வெளியே நிறுத்திய பள்ளி நிர்வாகம்

மாதவிடாயை காரணம் காட்டி தலித் சிறுமியை வகுப்பறைக்கு வெளியே நிறுத்திய பள்ளி நிர்வாகம்

ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் கோயம்புத்தூர்

 ஏப்.10 - கிணத்துக்கடவு அருகே தனியார்  பள்ளியில், மாதவிடாயை காரணம்  காட்டி தலித் சிறுமியை வகுப்ப றைக்கு வெளியே தேர்வு எழுத வைத்த ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவு  செய்ய வேண்டுமென அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா மற்றும்  மாநில பொதுச் செயலாளர் ஏ.ராதிகா  ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவித்திருப்பதாவது: கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு அருகே செங்குட்டை  பாளையத்தில் சுவாமி சிற்பவா னந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் தலித்  சிறுமியை மாதவிடாய் காரணம் காட்டி வகுப்பறைக்குள் அனுமதிக் காமல், பள்ளி நிர்வாகமும் ஆசிரிய ரும் வகுப்பறைக்கு வெளியே அமர  வைத்து தேர்வு எழுத வைத்துள்ள னர். இச்சம்பவத்தை தனது செல்போ னில் வீடியோ எடுத்து மாணவியின் தாய் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற இச்சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  பெண் கல்வியில், சமத்துவத்தில் விஞ்ஞானப் பூர்வமான கருத்துகளில் முன்னேற்றம் அடைந்துள்ள தமிழ கத்தில், இது போன்ற சம்பவங்களை அனுமதிக்கக் கூடாது. பெண்களின் உடலில் இயற்கையாக ஏற்படும்  மாற்றங்களை ஏற்றுக் கொள்ளா மல், மூடநம்பிக்கை கருத்துக்களை  வலியுறுத்தும் வகையில் செயல் படும் பள்ளி மீது கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும். தலித் சிறுமி என்பதால் இத்த கைய கொடூரம் நடந்ததாக செய்தி கள் வெளிவந்துள்ள நிலையில், இந்த  இழி செயலுக்கு காரணமானவர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை  எடுக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் மேற் கண்ட பிரச்சனையில் தலையீட்டு நட வடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.