tamilnadu

img

அடக்குமுறையை தவிடுபொடியாக்கியது தான் கம்யூனிஸ்ட் இயக்கம்

நாமக்கல், ஜன.13- ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைகளை தவிடுபொடியாக்கி முத்திரை பதித்தது தான் கம்யூனிஸ்ட் இயக்கம், என மோளியப்பள்ளி யில் நடைபெற்ற தோழர் வி.ராமசாமி  நூற்றாண்டு நிறைவு விழாவில் சாமி.நட ராஜன் உரையாற்றினர். சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், திருச் செங்கோடு சட்டமன்ற முன்னாள் உறுப்பின ருமான தோழர் மோளியப்பள்ளி வி.ராமசாமி- யின் நூற்றாண்டு பிறந்த தின நிறைவு விழா, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த  வாரம் நடைபெற்றது. மோளியப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தோழர் ராம சாமியின் மகனும், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவருமான ஆர்.வேலாயுதம் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ஆர்.குப்புசாமி வரவேற்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கொடி யினை, சங்கத்தின் மாநில பொதுச்செயலா ளர் சாமி.நடராஜன் ஏற்றி வைத்தார். நூற் றாண்டு விழா கல்வெட்டை மாவட்டச் செய லாளர் பி.பெருமாள் திறந்து வைத்தார். இதை யடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சாமி.நடராஜன் பேசுகையில், ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்திலும், பிறகு பிரிக்கப்பட்ட நாமக்கல் மாவட்டத்திலும் விவசாயிகள், பழங்குடியின மக்கள் கோரிக்கைகளுக்காக நடைபெற்ற அனைத்து போராட்டங்களிலும் முன்வரிசையில் நின்று தலைமையேற்றார். சட்டமன்ற உறுப்பினராக பணியாற்ற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, அதை ஒரு பதவியாக பார்க்காமல் பொறுப்பாக பாவித்து, மக்களின் குரலை அரசின் கவ னத்திற்கு கொண்டு செல்வதிலும் முக்கிய  பங்காற்றி சிறந்த சட்டமன்ற உறுப்பின ராகவும் விளங்கினார். தொடர் கைதுகள், சிறைவாசம், அடக்கு முறைகள் உள்ளிட்ட தாக்குதல்களை அனைத்தையும் தாங்கிக் கொண்டு, நெஞ் சுறுதியோடு கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த் தெடுப்பதில் முனைப்புடன் செயல்பட்டார். கடந்த காலங்களில் ஆளும் வர்க்கத்தால் தொடுக்கப்பட்ட அடக்குமுறைகளையும், அரசியல் சாகசங்களையும் தவிடுபொடி யாக்கி தமிழகத்திலும், இந்தியாவிலும் கம்யூ னிஸ்ட் இயக்கம் முத்திரைப் பதித்த வரலாறு கொண்டதாகும். இன்று நவீன தாராளமய சுரண்டல் கொடுமைகள் நீடித்துக் கொண் டுள்ள நிலையில், அதன் பின்புலத்தில் மத வெறி சக்திகள் கோலோச்சும் சவால்கள் நிறைந்த காலமாக இந்த காலம் உள்ளது. இவைகளை தங்களது அர்ப்பணிப்பு உணர் வோடு முறியடிப்பதற்கு தோழர் வி.ஆர். போன்ற தலைவர்களின் தியாக வாழ்வு நமக்கு அடி உரமாக அமைந்திடும் என்பது  திண்ணம், என்றார். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.பெருமாள்,  தலைவர் ஏ.ஆதிநாராயணன், சேலம் மாவட் டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, சங்ககிரி சிமெண்ட் ஆலை தொழிலாளர் முன்னேற்ற சங்க முன்னாள் செயலாளர் வி.கே.வெங்க டாசலம், விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் கே.பூபதி, துணைச்செயலாளர்கள் என்.ஜோதி, செல்வராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.தங்கரத்தினம், கிருஷ் ணன், பரமத்தி ஒன்றியச் செயலாளர் சண் முகம், சிபிஎம் முன்னாள் மாவட்ட செயற் குழு உறுப்பினர் பி.ஜெயமணி, மாவட்ட  செயற்குழு உறுப்பினர் எம்.கணேசபாண்டி யன், திருச்செங்கோடு நகரச் செயலாளர் எஸ். சீனிவாசன், ஒன்றியச் செயலாளர் கே.கதிர் வேல், முன்னாள் செயலாளர் ஆர்.மனோ கரன், சிஐடியு நிர்வாகி ஐ.ராயப்பன் உட்பட  பலர் கலந்து கொண்டனர். முடிவில், பொிய சாமி நன்றி கூறினார்.