பணியின் போது பாதுகாப்பு அவசியம்
வனத்துறை ஊழியர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்
சென்னை, மே 15 - வனத்துறையில் பணியாற்றும் வனக்காவலர், வனக்காப்பாளர் உட்பட அனைவரும் பணியின் போதும் எச்சரிக்கையாகவும் பாதுகாப்புடனும் செல்ல வேண்டும் என வனம் மற்றும் கதர்த் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “திருப்பத் தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் பணிபுரியும் வனவர் கார்த்திகேயன் மற்றும் வனக்காவ லர் திவாகர் இருவரும் புதன் கிழமை (மே 14) மாலை 06.20 மணியளவில் ஊத்தங்கரையில் இருந்து மத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மத்தூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கமலாபுரம் கிராமம் அருகே உள்ள முருகர் கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலை எண்: 77-ல், பெங்களூருவில் இருந்து திரு வண்ணாமலை நோக்கி வந்த கர்நாடகா அரசுப் பேருந்து மோதி வனக் காவலர் மற்றும் வனவர் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்ட செய்தியை அறிந்து மிகவும் மன வருந்தம் அடைந் தேன். பாதிக்கப்பட்ட வன பணி யாளர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். வனத்துறையில் பணியாற்றும் வனக்காவலர், வனக்காப்பாளர் உட்பட அனைவரும் பணியின் போதும், சாலையில் பயணிக்கும் போதும் மிகவும் எச்சரிக்கை யாகவும் பாதுகாப்புடனும் செல்ல வேண்டும் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.