மதுரை, ஜூன் 2- தூய்மைப் பணியாளர்களுக்கு பாது காப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். அதை அவர்கள் அணிவதை மேலதிகாரி கள் கண்காணிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட் டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை யில் கன்னியாகுமரி மாவட்டம் லூயி தூய்மை தொழிலாளர்கள் நலச்சங்கத் தலைவர் சுலிப் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதா வது:- கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத் துக்குடி மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் எங்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அரசு மருத்துவமனை, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்களுக்கு முகக் கவசம், கையுறை கள், கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படுவ தில்லை. இதனால் இவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, தூய்மைப் பணி யாளர்களுக்கு ஆயுள் காப்பீட்டு செய்ய வேண்டும். இவற்றை முறைப்படுத்த அதி காரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே தூய்மைப் பணியா ளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவேண்டும். ஆயுள் காப்பீட்டு செய்ய உத்தரவிட வேண்டும். தூய்மை பணியா ளர்களை அந்தந்த மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு, “தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்.
அவற்றை அவர்கள் அனை வரும் முறையாக (முகக் கவசம், கை உறை கள்) பயன்படுத்த வேண்டும். இதை அதிகாரி கள் உறுதி செய்யவேண்டும். தினம்தோறும் தூய்மைப் பணியாளர்களை அவர்களின் மேற்பார்வையாளர்கள் கண்காணிக்க வேண்டும். தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உப கரணங்களை பயன்படுத்தத் தவறினால், அதுகுறித்து புகைப்படங்கள் எடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்கறிச் சந்தை, மீன் சந்தை, அதிகளவில் குப்பை சேரும் இடங்களில் தூய்மைப் பணியா ளர்கள் கட்டாயம் நீளமான ‘ஷூ‘ அணி வேண்டும். அதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இந்த நடைமுறையை மதுரை மாநகராட்சி, மதுரை உயர்நீதிமன்ற எல் லைக்கு உட்பட்ட மாவட்டங்களில் பின்பற்ற வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வருகிற ஜூன் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.