இந்தியாவின் பன்மைத் தன்மையை அழிக்க மதவாத விஷத்தைப் பரப்பும் ஆட்சியாளர்கள்!
நாட்டு மக்கள் ஒன்றுபட்டுப் போராட பினராயி விஜயன் அழைப்பு
“இந்தியாவின் பன்மைத் தன்மையை அழிப்பதற்கும், ஒருவருக்கு எதிராக மற்றவரை பிளவுபடுத்தவும், சங்- பரி வாரத்தினர் சமுதாயத்தில் விஷத்தைப் பரப்பி வருகின்றனர்” என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், கேரள மாநில முதலமைச்ச ருமான பினராயி விஜயன் குற்றம் சாட்டினார். “இதற்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டுப் போராடுவதற்கு முன்வர வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார். மதுரையில் ஞாயிறன்று செம்படைப் பேரணி யுடன் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டு பொ துக்கூட்டத்தில் பினராயி விஜயன் பேசி
தந்தை பெரியார் - பி. ராமமூர்த்தி - கலைஞர் “
புரட்சிகர பாரம்பரியம் கொண்ட மதுரை மண்ணில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆவது மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. கீழவெண்மணித் தியாகி களின் மகத்தான பாரம்பரியத்துடன், தமிழ்நாட்டு தியாகிகளின், போராளிகளின் பாரம்பரியத்து டன், சமுதாயத்திற்காக துணிவுடன் பாடுபட்ட தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலை ஞர், தோழர்கள் பி. ராமமூர்த்தி, என். சங்க ரய்யா, ஆர். உமாநாத் ஆகிய தலைவர்கள் வாழ்ந்த தமிழகத்தில், மக்களைப் பிளவு படுத்தும் கொள்கைகளுக்கு எதிராக ஒருமுக மான சிந்தனையுடன் இந்த மாநாடு நடை பெற்றுள்ளது. கேரளமும், தமிழ்நாடும் சகோதரர்களாக உள்ளனர். இங்குள்ள திமுக அரசும், கேரளத் தின் இடது ஜனநாயக முன்னணி அரசும், ஒன்றிய அரசுக்கு எதிராக, மாநில அரசுகளின் உரிமைகள் பறிப்புக்கு எதிராக, கூட்டாட்சியைப் பாதுகாப்பதற்காக போராட்டத்தை முன்னெ டுத்து நடத்தி வருகிறோம். இந்தப் போராட்டம் வரக்கூடிய நாட்களில் நாட்டுக்கு முன்மாதிரியாக இருக்கும்.
மதுரை மாநாடு வரலாற்றில் இடம்பெறும்
அகில இந்திய மாநாடு, மக்கள் உரிமை களைப் பாதுகாப்பதற்கு, மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதற்கு, வகுப்புவாதத்திற்கு எதிராக போராடுவதற்கு வலிமை அளிக்கும் மாநாடாக நடைபெற்றுள்ளது. இந்த மாநாடு வரலாற்றில் இடம் பெறும். தேசிய அளவில் வித்தியாசமான சூழ்நிலை யில் இந்த மாநாடு நடைபெற்றுள்ளது. அமெ ரிக்காவில் டிரம்ப் பொறுப்பேற்றதற்கு பிறகு, ஆத்திரமூட்டக்கூடிய முறையில் பல நாடுகளின் மீது பொருளாதார ரீதியாக கைகளை முறுக்கும் தாக்குதலை நடத்தி வருகிறார். அதேசமயம் சீனா, தனது சொந்த பலத்தில் முன்னேறி, வலுவான சக்தியாக- அமெரிக்கா விற்கு சவால் விடும் அளவிற்கு வந்துள்ளது. சிலி, கொலம்பியா, மெக்சிகோ போன்ற நாடுகளில் முற்போக்கு சக்திகள், இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்துள்ளனர். பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இடதுசாரிகளின் சக்தி அதிகரித் துள்ளது. உலகம் முழுவதும் விஞ்ஞான சோசலி சத்தின் மீது மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், நம் நாட்டில் ஆட்சியில் இருப்ப வர்கள், மக்களுக்கு எதிராக உள்ளனர். இந்நிலை யில் பொதுவாக இடதுசாரிகள், குறிப்பாக- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நமக்கு முன்னால் உள்ள- நாம் செல்ல வேண்டிய பாதையைக் காட்டுகிறது.
நெருக்கடியைச் சமாளிக்க திசை திருப்பும் அரசியல்
தேசிய அளவில் உள்ள அரசியல் சூழலில், விவசாய நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு என மக்கள் துயரம் அதி கரித்துள்ளது. மோடி அரசு கொள்ளைக்கார முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு மக்கள் துயரத்தை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மக்களின் அதிருப்தி அதிக ரிக்கும் போது, வகுப்புவாத உணர்வை தூண்டி விட்டு, மக்களைத் திசை திருப்பி வருகிறது. அதி காரத்தில் இருப்பவர்கள் சமுதாயத்தில் மதவாத விஷத்தைப் பரப்பி வருகின்றனர். வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதல் தொடுத்துள் ளனர். ஒரு மதத்தினருக்கு எதிராக மற்றொரு மதத்தினரின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர்.
சிறுபான்மையினரையே பிளவுபடுத்துகின்றனர்
இந்தியாவின் பன்முகத் தன்மையை அழித்து, ஒற்றைத் தன்மையை ஏற்படுத்த வேண் டும் என்ற அவர்களது விரிவான திட்டத்தின் ஒரு பகுதி தான், ஒருவருக்கு எதிராக மற்றொருவரை தூண்டி விடுவதாகும். கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மிகப்பெரும் அளவு நிலம் வைத்திருக்கிறார்கள் என்று ஆர்எஸ் எஸ்-சின் ‘ஆர்கனைசர்’ பத்திரிகை இணைய தளத்தில் வெளியிட்டு, பின்னர் அதை நீக்கி விட்டனர். அதை அவர்கள் நீக்கி விட்டாலும், ஆர்எஸ்எஸ்-சின் மனநிலை என்ன என்பதை இது காட்டுகிறது. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என மதவழிச் சிறுபான்மையினரையும் கூட, ஒருவரை ஒருவர் பிளவுபடுத்தி, ஒற்றுமையை சீர்குலைத்து அவர்களது திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கின்றனர். பெரும்பான்மை மதவாத, கார்ப்பரேட் ஆதரவு கொள்கையை திணிக்க சமுதாயத் தின் எல்லா பிரிவினரிடமும் பிளவை ஏற் படுத்துகின்றனர். குறிப்பாக, சங்- பரிவாரத்தின் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல், அதற்கு ஏற்ப சில கட்சிகள் அதை நியாயப்படுத்த பார்க்கின் றனர்.
குஜராத், உ.பி. நிலைமை நமக்கும் ஏற்படலாம்
குஜராத்திலும், உத்தரப்பிரதேசத்திலும் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் தொடுக் கப்படுகிறது. அதேசமயம், மத்தியப் பிரதேசத்தி லும், சத்தீஸ்கரிலும் கிறிஸ்தவர்களுக்கு எதி ராக தாக்குதல் நடத்துகின்றனர். மணிப்பூர் தொடர்ந்து பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இதை நாம் புரிந்து கொள்ளாவிட்டால், அங்கு என்ன நடக்கிறதோ, அது நாளை நமக்கு நடக்கும். எனவே, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நடக்க வேண்டும். ‘எம்புரான்’ திரைப்படம், அரசியல் படம் அல்ல, அது ஒரு வணிகப்படம். ஆனால், அதில் உள்ள சில காட்சிகளை நீக்க வலியுறுத்தி அச்சு றுத்துகின்றனர். கடும் தாக்குதலை நடத்து கின்றனர். சினிமா தொழிலில் உள்ள, அதில் பணி யாற்றும் ஆயிரக்கணக்கானவரின் வாழ்வாதா ரத்தை சங்- பரிவாரங்கள் தாக்குகின்றனர். வகுப்புவாத விஷத்தை மிகப்பெரும் அளவு பரப்புகின்றனர். ஸ்டேன் சுவாமி, எப்.எம். உசேன் ஆகியோர் நிலையைப் பார்த்தோம். அரசு அவர்களை பழி வாங்கியதைப் பார்த்தோம்.
மனுவாதத்தை எதிர்த்தும் மக்களின் உரிமைக்கும் போராடுவோம்
மனுவாதத்திற்கு எதிராக போராடுவதுடன், மக்களின் வாழ்வாதாரம், வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, உரிமை பறிப்பு க்கு எதிராக, தொழிலாளர்களின் உரிமையை பாதுகாக்க, போராட வேண்டும். இந்தப் போராட் டங்களில் மக்களை அணிதிரட்ட வேண்டும். இத்தகைய இந்தியாவின் இருண்ட சூழ்நிலை யிலும் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு, பொதுத்துறையை பாதுகாப்பது, மக்கள் நல, சமூக நலத் திட்டங்களை அமலாக்குவது என முன்னேற்றம் கண்டு வருகிறது. புரட்சிகர பாரம்பரியம் மிக்க மதுரை மண்ணில் நடைபெற்றுள்ள இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வெற்றி பெறச் செய்ய, அனைவரும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்” என்று புரட்சிகர வாழ்த்துக் கள் தெரிவித்து பினராயி விஜயன் தனது பேச்சை நிறைவு செய்தார்.