tamilnadu

img

பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை

பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை

மார்ச் 26 - தஞ்சாவூர் மாவட் டம் பாபநாசம் அருகே பண்டாரவாடை ஊராட்சி கோயில் தேவராயன்பேட்டை கிராமத்தில் மெயின் சாலையையொட்டி பெரிய பள்ளம் உள்ளது.  ஆற்றங்கரைத் தெரு, அக்கரையார் நகர், தக்வா நகர் உள்ளிட்டவற்றிற்கு இந்த பள்ளத்தை கடந்துதான் செல்ல வேண்டும். இந்தப் பள்ளத்தை கடந்து வாகனங்கள் சென்று வருகின்றன. பள்ளம் உள்ள இடத்தில் கார், வேன்  உள்ளிட்ட வாகனத்தை திருப்புவது சிரமமாக உள்ளது என்கின்றனர் அப்பகுதி மக்கள். இரவு நேரத்தில் இந்தப் பள்ளத்தை கவனிக்காவிட்டால் அதில் விழ நேரிடும்.  குடிநீர் பணிக்காக தோண்டப்பட்ட இந்த பள்ளம் ஒரு மாதமாக மூடப்படாமல் உள்ளது. இதன் அருகிலேயே மற்றொரு பள்ளமும் உள்ளது. பைப் இணைப்பில் கசிவு  காரணமாக தினமும் குடிநீர் வெளியேறி வீணாகிறது. மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி பள்ளத்தை  மூடவும், பைப் இணைப்பை சீர் செய்யவும் வேண்டு மென அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.