மதுரை, ஜூலை 4- கொரோனா காலத்தில் மக்கள் பாதிக் கப்பட்டுள்ள நிலையில் மின் கட்டண உயர்வை வாபஸ் வாங்க வேண்டும். கூடு தல் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டு மென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை கிழக்கு தாலுகா குழு சார்பில் அழகர்கோயில், வண்டியூர், மாங்குளம், ஆண்டார் கொட்டாரம் கருப்பாயூரணி ஆகிய இடங்களில் மின் வாரிய அலுவலகங்களில் மனு கொடுக் கப்பட்டது. கிழக்கு தாலுகாச் செயலாளர் எம்.கலைச்செல்வன், சாமிகண்ணு, மலர், சின்னழகன், ராஜேந்திரன், சுப்பர மணியன் பெரியபிடாரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.