பள்ளிக் கூடம் போகலாம்
பாடம் கற்றுக் கொள்ளலாம்
துள்ளித் துள்ளிக் குதிக்கலாம்
தொட்டுத் தொட்டே ஓடலாம்
நல்ல நல்ல நண்பரை
நாமும் கண்டு கொள்ளலாம்
செல்லும் பாதை நல்லதாய்
தேர்ந்து நாமும் செல்லலாம்
உள்ளம் ஊன்றும் படிப்பிலே
உறுதி இருக்கு நம்பலாம்
கள்ளம் உள்ள மனதையும்
கழுவித் தூய்மை கொள்ளலாம்
அறிஞர் கவிஞர் வாழ்க்கையை
அங்கே அறிந்து கொள்ளலாம்
வறுமை வென்ற தலைவரின்
வாழ்க்கை உண்டு படிக்கலாம்
நாட்டுக் குழைத்த தலைவராய்
நாமும் நடக்கக் கற்கலாம்
வீட்டை நாட்டைக் காக்கிற
வித்தை கற்றுக் கொள்ளலாம்
கற்கும் பள்ளி கோயிலாம்
கல்வி உண்மைக் கடவுளாம்
பற்று வைப்போம் பள்ளியில்
படிக்க வாங்கப் போகலாம்.