திண்டுக்கல்லில் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. மரியாதை
திண்டுக்கல், அக்.2- மகாத்மா காந்தியின் 156வது பிறந்த தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாநக ராட்சியில் உள்ள அவரது சிலைக்கு ஆர். சச்சிதானந்தம் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் மாநக ராட்சியின் சார்பாக மாலை அணிவித்து மரி யாதை செய்தார். காந்தி கிராம பல்கலைக் கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் க.பழனி துரை, சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.பிர பாகரன், மாநகரச் செயலாளர் ஏ.அரபுமுக மது, மாநகரக்குழு உறுப்பினர் என்.கிருஷ் ணன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக நிர் வாகிகள் கவி.தாமோதரன், அ.வைத்தி லிங்கபூபதி, மா.கோபால், அமானுல்லா, கவி.சுசீலாமேரி, பாலமுருகன், தமிழக மக் கள் ஒற்றுமை மேடையின் சார்பாக நிர்வாகி கள் கே.எஸ்.கணேசன், டாக்டர் அமலா தேவி, காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சார்பாக தென்னிந்திய துணைத் தலைவர் எஸ்.ஏ.டி. வாஞ்சிநாதன், மாதர் சங்கத்தின் சார்பாக நிர்வாகிகள் பாப்பாத்தி, ஷோபா திலகம், நிறைமதி, சிஐடியு சார்பாக நிர்வாகி கள் சி.பி.ஜெயசீலன், ஜானகி, மாற்றுத்திற னாளிகள் சங்க நிர்வாகி ஜெயந்தி, பாலர் பூங்கா நிர்வாகி பாலமுருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.