tamilnadu

மார்ச் 28-இல் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் அறிவிப்பு

மார்ச் 28-இல் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்
சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் அறிவிப்பு

தமிழக அரசின் பட்ஜெட்டில் சத்துணவு அங்கன் வாடி ஓய்வூதியர்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லாததால் மார்ச் 28 இல் மாவட்டத் தலைநக ரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக சங்கத்தின் மாநில செயற்குழு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் (மார்ச் 15) திருச்சியில் நடைபெற்றது. மாநிலத் தலை வர் கே. பழனிச்சாமி தலைமை வகித்தார். திருச்சி  மாவட்டப் பொருளாளர் சி.ஜெயராஜ் வரவேற்று பேசி னார். பொதுச் செயலாளர் பி. இராமமூர்த்தி அறிக் கையையும் மாநில துணைத் தலைவர் கே.சக்தி நிதிநிலைஅறிக்கையையும் சமர்ப்பித்தனர்.  குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850, அகவிலைப் படி உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவிக்காதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. நடைபெறும் கூட்டத் தொடரிலேயே அரசு நமது  கோரிக்கைகளை அறிவிக்க வேண்டும். கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மார்ச் 28 அன்று மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, அடுத்த  கட்டமாக ஏப்ரல் 9-இல் மறியல் போராட்டம் நடத்து வது, ஜாக்டோ- ஜியோ சார்பில் மார்ச் 23 அன்று நடை பெறும் உண்ணாநிலை போராட்டத்திற்கு ஆதரவு  தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே. பழனிச்சாமி, பொதுச் செயலாளர் பி.இராமமூர்த்தி, மாநில துணைத் தலைவர்கள், மாநிலச் செயலாளர் கள் உள்ளிட்ட பலர் பேசினர். மாநில துணைத் தலைவர் எஸ்.கிரேஸ் சசிகலா நன்றி கூறினார்.