முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, செப்.23- ஒரு லட்சம் தமிழக விவசாயி களுக்கு இலவசமாக மின் இணைப்பு வழங்கும் திட்டத்தைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் வியாழனன்று (செப்.23) தொடங்கி வைத்தார். தமிழகத்தில் சட்டப்பேரவையில் முடிந்த மானியக் கோரிக்கையில் வெளி யான அறிவிப்புகளின் அடிப்படையில் ஒரே ஆண்டில் ஒரு லட்சம் விவசாயி களுக்கு மின் இணைப்பு கொடுக்கக் கூடிய திட்டம் வியாழனன்று தொடங்கி வைக்கப்பட்டது. 4 லட்சத்துக்கும் அதிகமான விவசா யிகள் மின் இணைப்புக்காகப் பதிவு செய்துள்ள நிலையில், முதல் கட்டமாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திட்டத்தைத் தொடங்கி வைத்து ஸ்டாலின் பேசியதாவது: “விவசாயிகளுக்கான ஒரு லட்சம் மின் இணைப்புகள் திட்டம் மகத்தானது. விவசாயிகளின் உற்பத்தியை மேம்ப டுத்தும் வகையில் புதிய மின் இணைப்பு கள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த மே மாதம் 7ஆம் தேதி நான் பதவி ஏற்க வில்லை. பொறுப்பை ஏற்றேன் என்று தான் சொல்ல வேண்டும். தமிழ்நாடு மின்வாரியத்தைக் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் சரியாகப் பராமரிக்கவில்லை. 19 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 2 லட்சம் விவசாயிகளுக்குத்தான் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நான்கு மாதத்திலேயே விவசா யிகளுக்கு மின் இணைப்பு தரும் திட்டத் தைச் செயல்படுத்தியுள்ளோம். தற் போது தமிழகத்தில் நடந்துவரும் திமுக ஆட்சி உழவர்களுக்கானது. தற்போது திமுக ஆட்சியில் அமைச் சர்கள் போட்டிபோட்டுக் கொண்டு தங்கள் பணிகளைச் செய்து வருகின்ற னர். இதைவிட வேகமான ஆட்சி தமிழ கத்தில் எந்த மாநிலத்திலும் நடைபெற வில்லை”. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.