tamilnadu

img

மாதவிடாய் என்பதால் மாணவியை வாசலில் அமர வைத்த தனியார் பள்ளி

மாதவிடாய் என்பதால் மாணவியை வாசலில் அமர வைத்த தனியார் பள்ளி

தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுக்கா வரதனூர் பஞ்சாயத்தில் உள்ள செங்குட்டைபாளையம் சிற்பவானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்  8 -ஆம் வகுப்பு படித்து வரும் பட்டியலின மாணவி ஒருவர் கடந்த 5 ஆம் தேதி பருவம் எய்தி யுள்ளார்.  மாணவிக்கு இப்போது முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் கடந்த 7 ஆம் தேதி (திங்களன்று) பள்ளி தேர்வு எழுதச் சென்ற மாணவியை  மாதவிடாயை காரணம் காட்டி, பள்ளி நிர்வாகத்தினர் வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வெளியே வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ளனர். சுமார் 2.30 மணி நேரம் வாசலில் அமர்ந்த படி தேர்வு எழுதிய மாணவி, கால் வலி ஏற்பட்டது தொடர்பாக தனது தாயிடம் கூறியுள்ளார். இந்நிலையில் 9 ஆம் தேதி (புதன்கிழமை)  மீண்டும் மாணவி தேர்வு எழுத சென்ற போது பள்ளிக்குள் அனு மதிக்காமல் வகுப்பறை வாசல் படிக்கட்டி லேயே தேர்வு எழுத கூறியுள்ளனர்.  இதுகுறித்து விசாரிக்க மாணவியின் பெற்றோர் பள்ளிக்குச் சென்ற போது மாணவி வகுப்பறைக்கு வெளியே அமர வைத்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ள னர். பின்னர் அதனை வீடியோவாக பதிவு செய்து, பள்ளி நிர்வாகத்தினரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு, “இது ஒரு பிரச்சனையா?” என நிர்வாகத்தினர் கேட்டுள் ளனர்.  இந்நிலையில் மாணவியை வகுப்பறை வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த வீடியோ இணையத்தில் பரவிய நிலையில், இது குறித்து விசாரிக்க தமிழ்நாடு மெட்ரிக்குலேசன்  பள்ளி இயக்குநர் ஏ.பழ னிச்சாமி மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் மற்றும் மெட்ரிக்குலேசன் கல்வி அலு வலருக்கு உத்தரவிட்டார். மேலும் இச்சம்ப வம் போல  தமிழகத்தில் எந்த பள்ளியிலும் நடக்கக்கூடாது என தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்க ளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.  இந்த நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி மற்றும் மெட்ரிக் குலேசன் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் புனித அந்தோனியம்மாள் பள்ளிக்குச் சென்று பாதிக்கப்பட்ட மாணவி, பள்ளி ஆசி ரியர்கள், பெற்றோரிடம் நேரில் விசாரணை மேற்கொண்டனர். அதே போல பொள்ளாச்சி சரக உதவி காவல் கண்கா ணிப்பாளர் சிருஷ்டி சிங் தலைமையிலான போலீசாரும் பள்ளி நிர்வாகத்தினரிடம் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.  மேலும் கிணத்துக்கடவு தாலுக்காவில் பட்டியலின மாணவி ஒருவர் வகுப்பறை வாசலில் அமர வைத்த விவகாரத்திற்கு பல் வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.  இதனிடையே கிணத்துக்கடவு சுவாமி  சிற்பவானந்தா மெட்ரிக் பள்ளி தாளாளர் சார்பில் மெட்ரிக்குலேசன் பள்ளி மாவட்ட கல்வி அலுவலருக்கு கடிதம் கொடுத்துள் ளார். அதில் பள்ளியில் தலைமை ஆசி ரியை ஆனந்தி தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரி வித்துள்ளார்.  இந்த விவகாரம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கூறியிருப்பதாவது:  “தனியார் பள்ளி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி  முதல்வர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை எவ்வகையாயினும் பொறுத்துக்கொள்ள முடியாது. அன்பு மாணவி தனியாக அமர வில்லை, நாங்கள் இருக்கிறோம், இருப்போம்” என தெரிவித்துள்ளார்.  இது குறித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “கிணத்துக்கடவு தனியார் பள்ளி விவகாரம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படும்” என தெரிவித்தார்.