தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் திறந்து வைத்தார்
தூத்துக்குடி, ஜுலை 27 - தூத்துக்குடி விமான நிலை யத்தில் ரூ.452 கோடி செலவில் உருவாக்கப்பட்ட புதிய முனையக் கட்டடத்தை பிரதமர் மோடி ஜூலை 26 அன்று திறந்து வைத்தார். மேலும் நெடுஞ்சாலைகள், ரயில்வே, துறைமுகம், மின்சாரம் ஆகியவை தொடர்பான ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய துடன், நிறைவுற்றப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார். தூத்துக்குடி விமான நிலையம் ரூ.452 கோடியில் சர்வதேச தரத்துக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பெரிய வகை விமானங்களும் தரை யிறங்கும் வகையில் 3,115 மீட்டர் நீளம் கொண்ட விமான ஓடுதளம், இரவு நேரத்தில் விமானம் தரை யிறங்குவதற்கான வசதிகள், ஒரே நேரத்தில் ஐந்து ஏ- 321 ரக விமா னங்களை நிறுத்தி வைப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சுமார் 17,340 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய பயணிகள் முனையத்தில் 43 மீட்டர் உயர கண்ட்ரோல் டவர், தீய ணைப்பு படைக்கான புதிய கட்டி டம், 3 ஏரோ பிரிட்ஜ், 5 விருந்தினர் அறைகள், ஒரு பெரிய உணவகம், சிற்றுண்டி கடைகள், மருந்தகம், ஸ்பா மையம், தாய்மார்கள் பாலூட் டும் அறை, செல்போன், லேப்டாப் சார்ஜ் செய்வதற்கான இடங்கள், இலவச வைபை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. புதிய முனையத்தின் புறப்பாடு பகுதியில் 4 வாயில்களும், பயணி கள் வெளியே வருவதற்கான 4 வாயில்களும், 21 பயணிகள் செக்- இன் கவுண்ட்டர்களும் உள்ளன. ஒரு மணி நேரத்துக்கு 1,440 பயணிகளை கையாளும் வகையில் அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. செட்டிநாடு கட்டிடக் கலையை பிரதி பலிக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள, இந்த புதிய முனையம் 4 நட்சத்திர அந்தஸ்து பெற்ற பசுமை கட்டிடமாக உள்ளது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய தகவல் - ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடு, தமிழக நிதி - மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென் னரசு, மீன்வளம், மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன், சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ. கீதாஜீவன், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு - வர்த்தகத் துறையின் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கனி மொழி எம்.பி., தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராஜேந்திர சோழன் நினைவு நாணயம் வெளியீடு
அரியலூர், ஜூலை 27 - கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டுள்ளார். ராஜேந்திர சோழனின் 1,005 ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா சோழர் கால கோயில்கள் கண்காட்சியுடன் புதன்கிழமை (ஜூலை 23) மாலை தொடங்கியது. நிறைவு நாள் விழாவில் பிரதமர் பெருவுடையாரை தரிசனம் செய்து, கோயில் வளாகம் மற்றும் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர் நடைபெற்ற விழாவில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார். நிறைவு நாள் விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில், ‘ஓம் சிவோஹம்’ பாடலும், சோழீஸ்வரருக்கு திருவாசகம் சிம்ஃபனியையும் இளையராஜா இசைத்தார். விழாவில் ஒன்றிய கலாச்சாரத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஷெகாவத், இணையமைச்சர் எல்.முருகன், ஆளுநர் ரவி, தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எஸ்.எஸ்.சிவசங்கர், தொல். திருமாவளவன் எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர். சோழர்களுக்கு சிலை தமிழ்நாட்டில் ராஜராஜ சோழன் மற்றும் முதலாம் ராஜேந்திர சோழனுக்கு பிரம்மாண்டமான சிலை அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.