tamilnadu

கவின் சாதி ஆணவக்கொலை வழக்கு காவல் சார்பு ஆய்வாளர் ஜாமீன் கோரி மனு

கவின் சாதி ஆணவக்கொலை வழக்கு காவல் சார்பு ஆய்வாளர் ஜாமீன் கோரி மனு

திருநெல்வேலி: ஐடி ஊழியர் கவின் சாதி ஆணவக் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள காவல் சார்பு ஆய்வாளர் ஜாமீன் கோரி நெல்லை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர்  ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் (27). பட்டியலினத் தைச் சேர்ந்த இவர் கடந்த ஜூலை 27ஆம் தேதி பாளை கேடிசி  நகரில் காதல் விவகாரத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.  இது தொடர்பாக, பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுர்ஜித்,  அவரது தந்தையான காவல் சார்பு ஆய்வாளர் சரவணன், சுர்ஜித்தின் உறவினரான தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெய பால்(29) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து பாளை. மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே காவல் சார்பு ஆய்வாளர் சரவணன் தரப்பில் அவரது வழக்கறிஞர் சிவசூர்ய நாராயணன், நெல்லை 2ஆவது கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு  செப்.15 (திங்கள்) அன்று விசாரணைக்கு எடுத்துக் கொ