மதுரை
மதுரை மாவட்டம் கீரைத்துறை பகுதிக்கு அருகே உள்ள காமராஜர்புரத்தில் வசிப்பவர் வி.கே. குருசாமி. இவர் திமுகவின் முன்னாள் மண்டல தலைவராக இருந்தவர். இவரது வீட்டில் இன்று மர்மநபர்கள் 5 பேர் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். மேலும் அவரது வீட்டிற்கு அருகில் இருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர்.
இந்த தாக்குதலால் குருசாமியின் வீட்டிற்கு பெரியளவு சேதம் இல்லை என்றாலும், வாகனங்கள் கடுமையாக சேதமடைந்தன. போலீசார் விசாரணையில் அதிமுக கட்சியைச் சேர்ந்த ராஜபாண்டி தரப்பினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், முன்விரோதம் காரணமாக நிகழ்ந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது போலீசார் சிசிடிவி காட்சியை அடிப்படையாக வைத்து பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை தேடி வருகின்றனர்.