பெரியார் தொண்டர் பி.வரதராசன் 115 முறை குருதிக் கொடை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விருது வழங்கி கவுரவிப்பு
சென்னை, அக். 14- தன்னார்வ குருதிக் கொடையாளர்கள், குருதிக் கொடை பாசறை அமைப்பாளர்கள், மாவட்ட அரசு மருத்துவமனை குருதி மைய துறைத் தலைவர்கள் ஆகியோருக்கு விருது வழங்கி பாராட்டு நிகழ்ச்சி சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்ட ரங்கில் நடைபெற்றது. அப்போது மதுரையைச் சேர்ந்த தந்தை பெரியார் குருதிக் கொடைக்கழகத் தலைவர் பி.வரதராசன் ஏ நெகட்டிவ் (A-) குருதியை 115 முறை வழங்கி யதைப் பாராட்டி, அவருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணி யன் விருதினையும், சான்றி தழையும் வழங்கி பெருமை சேர்த்தார். குருதிக் கொடையாளர் ம.சோசுவிற்கும் விருது, சான்றிதழ் வழங்கப்பட்டது. மதுரை அரசு இராசாசி மருத்துவமனை குருதி மையம் அதிக அளவில் தன் னார்வ குருதிக் கொடை யாளர்களை உருவாக்கி யதை பாராட்டி துறைத் தலைவர் மரு. சிந்தாவிற்கு விருது, சான்றிதழ் வழங்கப் பட்டது.