விசாரணை என்ற பெயரில் நகை, பணம் பறிப்பு: இரு காவல் ஆய்வாளர்கள் மீது வழக்கு
கோவை, அக்.14- விசாரணை என்ற பெயரில் பெண்ணிடம் நகை, பணம் பறித்ததாக கூறப்படும் இரு பெண் காவல் ஆய் வாளர்கள் மீது கோவை லஞ்ச ஒழிப்பு காவல் துறையி னர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடலூரை சேர்ந்த சித்ரா அளித்த புகாரின்படி, கோவை நகர சைபர் கிரைம் ஆய்வாளராகப் பணி யாற்றிய மல்லிகா (தற்போது திருப்பூர் சிறப்பு புல னாய்வு ஆய்வாளர்) மற்றும் கோவை குற்றப்பிரிவு ஆய் வாளராகப் பணியாற்றிய கலையரசி (தற்போது விழுப்பு ரம் கள்ளியனூர் காவல் நிலைய ஆய்வாளர்) ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சித்ரா, கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வசித்தபோது, 50 லட்சம் ரூபாய் கடன் தொடர்பான பிரச்னையில் பொய்யான புகார் அளிக்கப்பட்டதாகவும், விசாரணையின்போது மல்லிகாவும், கலையரசியும் தன்னை மிரட்டி 8 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும் வங்கி பரிமாற்றமாகவும், 375 பவுன் தங்க நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களைப் பறிமுதல் செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும், ஜாமீன் பெற லஞ்சம் கோரப்பட்ட தாகவும், மறுத்தபோது தன்னையும் 19 வயது மகளை யும் வன்முறைக்கு உட்படுத்தியதாகவும் புகார் தெரி வித்துள்ளார். 1.20 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை களை மீட்கவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும் கோரியுள் ளார். இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் எழிலரசி விசாரணை நடத்தியதையடுத்து, செவ்வாயன்று ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவின் கீழ் மல்லிகா, கலையரசி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப் பதிவுக்கு அரசின் இணைச் செயலாளரின் முன் அனுமதி பெறப் பட்டுள்ளது.