tamilnadu

img

பெரம்பூர் காவல் நிலைய காவலர்கள் கூண்டோடு மாற்றம்

பெரம்பூர் காவல் நிலைய காவலர்கள் கூண்டோடு மாற்றம்

மயிலாடுதுறை மாவட்டம்  பெரம்பூர் காவல் நிலையத் தில் பணியாற்றிய காவலர்கள்  அனைவரும் கூண்டோடு பணி யிட மாற்றம் செய்யப்பட்டுள்ள னர்.  மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் எல்லைக்குட் பட்ட முட்டம் கிராமத்தில் கள்ளச் சாராய விற்பனையைத் தட்டிக் கேட்டதால், கடந்த  பிப்.14 ஆம் தேதி இரவு, சாராய வியாபாரி களால் முட்டம் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஷ், சீனிவாசபுரத்தைச் சேர்ந்த ஹரி சக்தி ஆகியோர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து, பெரம்பூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து ராஜ் குமார், தங்கதுரை, மூவேந்தன், முனுசாமி, மஞ்சுளா ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

 இந்த இரட்டை கொலை சம்பவத்தின் எதி ரொலியாக பெரம்பூர் காவல் நிலைய ஆய்வா ளர் நாகவள்ளி காத்திருப்போர் பட்டியலுக்கு  மாற்றப்பட்டார். தொடர்ந்து எஸ்.பி. தனிப் பிரிவு காவலர் பிரபாகர் பணியிட மாற்றம்  செய்யப்பட்டார். உதவி ஆய்வாளர்கள் மணி மாறன், சங்கர் ஆகியோரும் அடுத்தடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.  இந்நிலையில், வெள்ளியன்று இரவு பெரம்பூர் காவல் நிலையத்தில் 19 போலீ சாரை அதிரடியாக கூண்டோடு பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி., ஸ்டாலின்  உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் காவல் துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது. காவல்துறையின் இந்த நடவடிக்கையை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடு துறை மாவட்டக் குழு வரவேற்றுள்ளது.