tamilnadu

img

நாகர்கோவிலில் ஓய்வூதியர் பாதுகாப்பு தின கருத்தரங்கம்

நாகர்கோவிலில் ஓய்வூதியர் பாதுகாப்பு தின கருத்தரங்கம்

நாகர்கோவில். அக். 2- ஒன்றிய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் ஓய்வூதியர் பாதுகாப்பு தின கருத்தரங்கம் அக்.1-ம் தேதி நாகர்கோவில் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் அகில இந்திய தபால் மற்றும் ஆர்எம்எஸ் ஓய்வூதிய் சங்க மாவட்ட செயலாளரும், ஒருங்கிணைப்பு குழு தலைவருமான பி.ராஜநாயகம் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க செயலாளர் சி.எம்.ஐவின் வரவேற்றார். நவீன தாரளமயமும் ஓய்வூதியமும் என்ற தலைப்பில், ஓய்வு பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் நலச்சங்க மாநில துணைச் செயலாளர் பேராசிரியர் டி.மனோகர ஜஸ்டஸ், நாடு எதிர்நோக்கும் சவால்கள் என்ற தலைப்பில் சிஐடியு மாவட்ட பொருளாளர் பி.இந்திரா பேசினர். ஒருங்கிணைப்புக் குழுபொருளாளர் எஸ்.சிவதானு நன்றி கூறினார்.  கருத்தரங்கில் மகளிர் உட்பட ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஒன்றிய, மாநில அரசு ஊழியர், மின்வாரிய, போக்குவரத்து, பிஎஸ்என்எல், தபால்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.