மதுரை மேலூர் அருகே உள்ள பட்டூர் அரசுப் பள்ளியில், மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் பாப்பா பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மேலூர் அருகே உள்ள பட்டூர் அரசுப் பள்ளியில் மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்யவைத்து பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கவிதா என்பவர் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் கல்வித்துறை அதிகாரி, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பாப்பாவை பணியிடமாற்றம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.