11,432 ஜவுளித் தொழிற்சாலைகளில் 8,383 மட்டுமே இயங்குகின்றன!
ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., கேள்விக்கு அமைச்சர் பதில்
மார்ச் 16 - தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 11,432 ஜவுளித் தொழிற்சாலை களில் 8,383 தொழிற்சாலைகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருப்பதாகவும், இயங்காத தொழிற்சாலைகளில் பணியாற்றி வேலையிழந்த தொழிலாளர்கள் குறித்த தரவு அரசாங்கத்திடம் இல்லை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சி தானந்தம் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொ டரின் இரண்டாவது அமர்வு நடை பெற்று வருகிறது. மக்களவையில் கேள்வி நேரத்தின்போது ஆர்.சச்சி தானந்தம், தமிழ்நாடு உட்பட நாட்டில் செயல்படாது இருக்கும் தொழிற்சாலை களின் எண்ணிக்கை எவ்வளவு, அதற்கான காரணம் என்ன, அவற்றை இயங்க வைப்பதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன, மூடிக் கிடக்கும் தொழிற்சாலைகளில் வேலையிழந்த தொழிலாளர்களின் மறுவாழ்விற்காக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று கேட்டிருந்தார். இதற்கு எழுத்து மூலம் பதிலளித்த ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் கிரி ராஜ் சிங், “தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 11,432 ஜவுளித் தொழிற்சாலை களில் 8,383 தொழிற்சாலைகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருக் கின்றன. மற்றவை மூடிக் கிடக்கின்றன. அவற்றை நவீனமயப்படுத்தாததும், மோசமான நிர்வாகமும், ஜவுளித் தேவை யில் தேக்க நிலை ஏற்பட்டிருப்பதும், ஏற்றுமதி சந்தையை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியாததுமே கார ணங்கள்” என்று கூறியிருக்கிறார். இவ்வாறு ஆலைகள் மூடிக் கிடப்ப தால் வேலையிழந்த தொழிலாளர்கள் தொடர்பான தரவு எதுவும் அரசிடம் இல்லை என்றும் அமைச்சர் தெரி வித்துள்ளார்.
அதானி குழுமத்திற்கு தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை எவ்வளவு என்று
வெளியே சொல்லக் கூடாதாம்!
பொதுத் துறை வங்கிகளில் அதானி குழுமம் வாங்கித் திருப்பிச் செலுத்தாத கடன் தொகை குறித்து வெளியே சொல்லக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதி லளித்துள்ளார். நாடாளுன்ற பட்ஜெட் கூட்டத்தொ டரின் இரண்டாவது அமர்வில், கேள்வி நேரத்தின் போது மக்களவையில் ஆர். சச்சிதானந்தம், “2014-2024 ஆண்டு களில் அதானி குழுமம் பொதுத்துறை வங்கிகளில் வாங்கி, செயல்படாத சொத்துகள் (NPAs-Non Performing Assets) என்ற பெயரில் திருப்பிச் செலுத் தாத கடன் தொகை எவ்வளவு என்றும், அதேபோல் அதே ஆண்டு காலத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் பெற்று, திருப்பிச் செலுத்தாத கடன்தொகை எவ்வளவு” என்றும் கேட்டிருந்தார். இதற்கு எழுத்து மூலம் பதிலளித்த ஒன்றிய நிதி இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, “இந்திய ரிசர்வ் வங்கியின் 45ஈ- பிரிவின்படி இந்தத் தகவல்களை வெளிப் படுத்தக் கூடாது” என்று கூறியிருக்கிறார்.